பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

%6

பிடியும் களிறும்

வியப்பு உண்டாயிற்று. தோழிமார் பலரும் அந்த நிலையில் அவர்களைப் பார்த்து வியப்பே வடிவமாக நின்றர்கள். இவளுடைய உயிரை மீட்டுக் கரையேற் றினன் இந்தப் பெருமான். இறைவனுடைய திருவ ருளே இந்த நிகழ்ச்சியை நிகழச் செய்தது போலும்! இவளுடைய உயிருக்கு இடையூருக வந்த புனல், இவளுக்கு உயிர்க்குயிராகிய தலைவன் ஒருவனைத் தந் தது' என்ற நினைவே எங்கள் உள்ளத்தில் எழுந்தது. மற்றத் தோழிமார்கள் இதையே சொல்லிக் கொண் டிருக்கிரு.ர்கள். இது ஊரிலும் பரவிவிட்டது.

செவிலி : எனக்குத் தெரியாதே!

தோழி : உங்களுக்கும் தெரிந்திருக்கலாம் என்று எண்ணி

யிருந்தேன். ஆனல் சில நாட்களுக்கு முன்தான், இந்த உண்மை உங்களுக்குத் தெரியாது என்பதைத் தெரிந்து கொண்டேன். -.

செவிலி : எப்படித் தெரிந்து கொண்டாய்?

தோழி : தலைவி நீரில் ஆழாமல் எடுத்து உயிர் கொடுத்துக்

காதற் கடலில் ஆழ்த்திய அந்தத் தலைவர் அன்று இவளை மணம் பேசச் சான்ருேரை விடுத்தார். அவர் கள் வேண்டுகோளை நீங்கள் மறுத்து விட்டீர்கள். அப்போது தான் உங்கள் அறியாமை எனக்குத் தெரிந் தது. இவள் இன்னும் கன்னியென்று நீங்கள் நினைத் திருப்பதை மாற்றவேண்டும் என்று தோன்றியது. இவள் அருமழை தரல் வேண்டின் தரும் ஆற்றல் உடைய பெருமையினள் என்பதைக் காரணத்துடன் சொல்லத் துணிவு கொண்டேன்.

காமர் கடும்புனல் கலந்து எம்மோடு ஆடுவாள், தாமரைக்கண் புதைத்துஅஞ்சித் தளர்ந்து

அதைேடு ஒழுகலால்,