பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 திருமண முயற்சி

நீள்காக நறுந்தண்தார் தயங்கப்பாய்ந்து அருளினுல் பூண் ஆகம் உறத்தழிஇப் போதந்தான் அகன்அகலம் வருமுலை புணர்ந்தன என்பதல்ை, என்தோழி அருமழை தரல்வேண்டின் தருகிற்கும் பெருமையளே.

| அழகும் வேகமும் உடைய நீரில் எம்மோடு கூடி விளை யாடப் புகுந்த தலைவி, கால் தளர்ந்து தன் தாமரை போன்ற கண்களை அச்சத்தால் பொத்திக்கொண்டு அந்த நீரோடு போகையிஞல், நீண்ட சுரபுன்னை மலரால் தொடுத்த குளிர்ச்சியான மாலையானது விளங்கும்படி அந்நீரிலே பாய்ந்து, அருளினால் ஆவளு டைய அணியை அணிந்த மார்பை இறுகத் தழுவிக் கரைக்கு வந்தவனுடைய அகன்ற மார்டை அவளு டைய எழுந்து வளரும் நகில்கள் அனந்தன என்ற செய்தியால், என் தோழியாகிய அவள் அரிதாகிப் போன மழையைத் தருதலை நாம் வேண்டினுல் உடனே தரும் ஆற்றல் பெற்ற சிறப்பை உடையவளாளுள்.

ஒரு தலைவனிடம் காதல்கொண்டு அவனையன்றிப் பிற தெய்வத்தைத் தொழாத கற்புடையாள் ஆளுள் என்பது கருத்து.

காமர்-அழகு; விருப்பம் என்றும் சொல்லலாம். கடும் புனல்-வேகமான நீர்; கடுமையான நீர் என்பதும் பொருந் தும். புதைத்து-மூடி. தளர்ந்து-சோர்வுற்று. ஒழுகலால்போதலால். நாகம்-சுரபுன்னே. தார்-மார்பில் அணியும் மாலை. தயங்க-விளங்க. ஆகம்-மார்பு. உற-இறுக தழிஇதழுவி. போதந்தான்-வந்தான். அகன்:அகல் என்பதன் விகாரம். தருகிற்கும்-தரும் வன்மை படைத் த. }

இவ்வாறு அவள் கூறவே, செவிலி தலைவன் செய் ததை எண்ணி மனத்துக்குள் உவகை பூத்தாள். தன் மகளின் உயிரைப் பாதுகாத்தவன் அவன் என்ற நல்ல எண்ணம் உண்டாயிற் று. ஆளுல் உயிர் காத்த செயலும்,