உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிடி சாம்பல்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சாம்பல்‌

27

ன்ன இது?”

“திருநீறு?”

“ராம! ராம!”

“ஏன்? இந்தத் திருநீறு அல்லவா பல்லவ ராஜ்யத்தைக் காப்பாற்றி, நரசிம்ம மன்னனின் பீடம் ஆடாதபடி பார்த்துக் கொண்டது—பாதுகாப்பளித்தது?”

“துடுக்குத்தனமாகப் பேசாதே. ஓய்! வைணவ சிரோன்மணியே! வாயை மூடும்! வாதாபி தீக்கு இரையாகாது இருந்தால் என்ன நேரிட்டிருக்கும்?”

“நேரிடுவது என்ன—என்ன ஐயா! மிரட்டுகிறீர்?”

‘நானா? இதுவா மிரட்டல்! உண்மையைக் கண்டு ஏன் நீர் மிரள்கிறீர்? வாதாபி வீழ்ச்சி, பல்லவனின் மீட்சியல்லவா?’

“ஆமென்றே வைத்துக் கொள்வோம்!”

இதிலென்ன தயை! சாளுக்கியப்படையை, சாளிக் கிராமம் தடுத்துவிடவில்லை, ஞாபகமிருக்கட்டும். ‘சடாட்சரம்’ தடுத்தது. சடாட்சரமோ, பஞ்சாட்சரமோ—எனக்கு அக்கரை இல்லை; எமது நரசிம்ம மன்னர் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றார் மன்னர், மனமறிந்த பொய் பேசுகிறீர். மாதவன் அடியார் என்று கூறிக் கொள்கிறீர். மன்னனுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது, இந்தத் திருநீறு. தோல்வியால் துவண்ட பல்லவ நாட்டை வெற்றியால் ஜொலிக்கச் செய்த விசித்திர நீறு! மதிலுக்குள் ஓடி ஒளிந்து மகேந்திரனின் காலத்தை—அவன் மகன் காலத்தோடு ஒப்பிட்டுப் பாரும்! இடையே என்ன காண்கிறீர்? அன்று பரஞ்ஜோதி இல்லை; விளைவு என்ன? படுதோல்வி; இன்று பரஞ்ஜோதி இருக்கிறார். பலன்? பெருவெற்றி! திருநீற்றின் வெற்றி—சிவனருளின் வெற்றி!—சைவத்தின் மேன்மையை ஜெகம் அறியச் செய்தது இந்தப் பிடி சாம்பல்! பூசும் நெற்றியில், வாழ்க்கை வற்றாத வளமுள்ளதாகும். இது சாமான்யத் திருநீறு அல்ல—பரஞ்ஜோதியின் பூஜைக்குப் பயன்படும், பரிமளத்திருநீறு—பகையை ஒழிக்கும் பொடி—பல்லவ சாம்ராஜ்யத்தை நிலை நாட்டிய திருநீறு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/27&oldid=1765273" இலிருந்து மீள்விக்கப்பட்டது