பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பின்னு செஞ்சடை

" தேன் மாரி போல் இருந்தது.” செவிப்புலனுக்கு இன்பம் உண்டாகிறது. அதற்கு நாவாலே சுவைக்கும் அமுதமும் கேனும் அளவு கோலாகின்றன. ' என் கனியே, தேனே, கட்டிக் கரும்பே ' என்று அன்புடையாரைச் சொல் கிருேம். இதற்கெல்லாம் காரணம் சுவையினி மையே மக்கள் உள்ளத்தில் சிங்காதனமிட்டு ஆட்சி புரிகிறது என்பதுதான். - -

இறைவனேயும் அன்பர்கள் சுவைப் பொருளா கப் பாராட்டினர்கள். அமுதென்றும், தேனென் ஆறும், கனியென்றும், கரும்பென்றும் பாராட்டினர். திருஞானசம்பந்தப் பெருமான் அப்படிச் சொன்ன இடங்கள் பல பல.

சோழ காட்டில் திருமங்கலக்குடி என்பது ஒரு தலம். அங்குள்ள ஆவிநாயகராகிய சிவபெரு மானேக் கரிசித்துப் பதிகம் பாடினர் சிவ ஞானப் பால் அருந்திய பெரியார். இறைவனுடைய கல் லருளையும் ஞானத்தையும் பாலாக உண்ட பெரு மான் அவர். அவருக்கு இறைவன் தேகிை அமு தாகி நிற்பவன். அவருக்கு மாத்திரம் அப்படி இருப்பவன் என்று சொல்லலாமா மற்றவர்களுக் கும் தேனுய் அழுதாகி நிற்பவன்தான். ஆனல் அங்க மற்றவர்கள் யார்? உலகிலுள்ள யாவருமா ? இல்லை, இல்லை. - . . . . . . . . .

பசித்தவனுக்கு உணவு ருசிக்கும் பசியில் லாமல் வயிற்று வலி கொண்டவனுக்கும். பிற நோயாளிக்கும் உணவு சுவைக்காது. அதுபோல, இறைவனிடத்திலே அன்புகொண்டு அவன் அரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/18&oldid=596902" இலிருந்து மீள்விக்கப்பட்டது