பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யார் அறிவார்?

'மனத்தில்ை மனிதனுகிறன்' என்று வட மொழியில் ஒரு செய்யுள் உண்டு. வாசனை ஏறி எறிப் படலம் படலமாக அடுக்கி நிற்க, அமைந்த மனந்தான் மனிதனுடைய இன்ப துன்பங்களுக்குக் காரணமாகிறது. மனத்தின் வசப்பட்டு வாழ் வாருக்கு நிலையான முயற்சியும் கிலேயான வாழ்க் கையும் இருப்பதில்லை. மனம் போன போக்கின் படியே போகிறவர்கள் மேலும் மேலும் பிறவிப் பிணிக்கு ஆளாவார். -

ஆனல் அந்த மனத்தைக் கொண்டே கன் னெறியிலேசென்று நற்பயன் கொள்ளலாம். மனத் தின் வசப்பட்டு காம் இயங்காமல் நம் வசப்பட்டு மனம் இயங்கினல் நன்மை உண்டாகும். அதற்கு நெடுங் காலப் பழக்கம் வேண்டும். அடியார்களின் . கூட்டத்திலே பழகுவதல்ை மனத்தின் இயக்கம் கம் வசப்பட்டு வரும். மனத்தை அடக்கிப் பின்பு அதனை அழித்தால் இன்பம் உண்டாகும். மனம் அழிவதற்கு அந்த மனத்தையே துணேயாகக் கொள்ள வேண்டும். - -

ஞானசம்பந்தப் பெருமான் மனத்தைப் பார்க் துப் பேசுகிருரர்; நாம் பேச வேண்டியதை அவர் பேசிக் காட்டுகிரும். சொன்னபடி கேளாத குழங் தையைத் தட்டிக் கொடுத்து வேலே வாங்குவது போல நெஞ்சத்தைத் தட்டிக் கொடுக்கிருர், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/34&oldid=596952" இலிருந்து மீள்விக்கப்பட்டது