பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பின்னு செஞ்சடை

தலத்தின் சிறப்பைச் சொல்லப் புகுந்தார். வாழையும் கமுகும் எழில் பெற்று கிற்கும் கில வளத்தை உடையது குடவாயில். அந்த வளத்தைச் சொல்கிருரர். -

வாழைமரம் தாறுபோட்டு கிற்கிறது. குலேயில் இருந்தபடியே காய்கள் பழுக்கின்றன. அப்போது அவை பொன் சிறத்தை அடைகின்றன. கமுக மரத்திலும் குலே குலையாகக் காய்கள் தொங்குகின் றன. அவை பழுத்தால் பவள நிறம் பெற்று விளங்குகின்றன. வாழை பொன் பழுக்கிறதாம். கமுக மரம் பவளம் பழுக்கிறதாம். இத்தகைய குடவாயிலிலே நிலையாக வாழ்வதற்காக ஒரு கோயிலை இறைவன் ஏற்றுக் கொண்டான். அந்தக் .ே கா யி லே யே தன்னுடைய அரண்மனையாகக் - கொண்டு மகிழ்ந்து தன் அருள் என்றும் வெளிப்

படும்படி அங்கே கின்று கிலவுகிறன். -

குலைவாழை கமுகம்பொன்

பவளம் பழுக்கும் குடவாயில் நிலவாழும் கோயிலே

கோயி லாக நின்றீரே. (குல்ேகளையுடைய வாழை பொன் போன்ற பழங்களைப் பழுக் கவும், குலேகளேயுடைய கமுகமரம் பவளம் போன்ற கனிகளைப் பழுக்கவும் இடமாகிய கிருக்குடவாயிலில்கிலேயாகவாழ்வதற்குரிய திருக்கோயிலே ர்ே வாழும் அரண்மனையாக மகிழ்ந்து கின்றீர்.

குலைவாழை, குலேக்கமுகம் என்று இரண்டுக்கும் கூட்டிப் - பொருள்கொள்க.வாழை பொன்னும், கமுகம் பவளமும் பழுக்கும் என்று கிரனிறையாகக் கொள்க. கில்ேவாழும்.கிலேயாக வாழும். கோயிலாக: கோ இல்-தல்வன் வாழும் அரண்மனை தலைமையை யுடைய மாளிகை என்றும் சொல்லலாம். ஏ: அசைகிலே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/56&oldid=596995" இலிருந்து மீள்விக்கப்பட்டது