பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5孕 பின்னு செஞ்சடை

சாய்த்து வணங்கியும் வாழும் அன்பர்கள் இறைவது டைய அருளைப் பெறுவார்கள்.

அன்பு வளர வளர்ந்த பெரியார் கையால் தொழுது தலைசாய்த்து உள்ளம் கசிந்து வாழ்பவர். அவருக்கு முன்பு உடம்பில் ஏதோ நோய் இருந்தது. மெய்யிலே ஆர்ந்த அந்தக் குறையை அவர் பொருட் படுத்தினரோ, இல்லையோ, யாரும் அறியார். ஆல்ை நாளடைவில் அந்த நோய் இருந்த இடம் தெரியா மல் ஒழிந்து போயிற்று. அவர் உடம்பிலே பொலி வும், முகத்திலே தேசும் உண்டாகி விட்டன. அவர் திருமேனியிலே பூசும் வெண்ணிறு அந்த மேனிக் குப் பின்னும் எழிலை சந்தது. - *

அவர் மனிதர்தாமே? மனம் படைத்த மனிதர் களுக்கெல்லாம் துயரம் இருப்பது இயல்பு. உடம் பிலே நோயும் உள்ளத்திலே துயரும் வாட்ட வாடு பவர்கள் மனிதர்கள். உடம்பிலே உள்ள நோயை 'யாவது மருத்துவர்களே அணுகி அவர் ஈயும் மருந்து களே உண்டு போக்கிக் கொள்ளலாம். ஆனல் மன நோய்க்கு மருந்து இல்லை. இறைவன் அருளேத் துணேயாகக் கொண்டாலன்றி மனக்கவலை மாறது.

“தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவல்ே மாற்றல் அரிது’ என்பது வள்ளுவர் வாய் மொழி.

முன்னே சொன்ன அன்பருக்கு மெய்யிலே இருந்த நோய் மாறியது பெரிதல்ல. அவர் மனத் திலே உள்ள துயர்களெல்லாம் போயின. மாசு மறுவற்ற அந்த மனத்தின் முழு இடத்திலும் இறைவன் வெளிப்பட்டு அமர்ந்திருக்கும் போது மற்றென்றிற்கு அங்கே இடம் ஏது? .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/60&oldid=597003" இலிருந்து மீள்விக்கப்பட்டது