பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£60 பின்னு செஞ்சடை

லாம் காட்டிக் கொள்ளாமல் சும்மா இருக்கிமூன். அவ்விடத்தில் அரசன் இருக்கிருன் என்பது உண்மை. அல்ை அவன் கன் இயல்புகளோடா இருக்கிருன் ? எல்லோரும் கா லு ம் ப டி யா இருக்கிருன் ?

அவன் தன் நாட்டில் தன் அரண்மனையில் எப்படி இருக்கிருன்? தன் ட் டார் நன்கு காணும்படியாக உலவுவான். தனக்குரிய கோலத் தோடு விளங்குவான். ஆணே செலுத்துவான்.

இறைவன் எல்லோருடைய சிங்தையிலும் உறைக் தாலும் எல்லா விடத்தும் அவனுடைய அருளாற்றல் வெளியாவதில்லை. அன்பில்லாதவர்களுடைய உள் ளத்தில் கள்வனேப் போல மறைந்து கிற்கிருன். ஆனல் கன்னே இறைஞ்சுபவர்களுடைய சிங்தை யிலோ தன் முழு அருளோடும் இலங்குகிருன். கினேப்பவர் மனம்அவனுக்குக் கோயிலாகி விடுகிறது. தனக்குரிய அரண்மனையிலே தன் இயல்பு விளங்க வீற்றிருக்கும் மன்னனைப் போல, இறைஞ்சுவார் சிங்தையுள்ளே திகழ்கிருன் இறைவன்.

எந்தை இவன் என்று இரவி,முதலா இறைஞ்சுவார் சிந்தை புள்ளே கோயி லாகத் திகழ்வானே. (எம்மைப் படைத்த தந்தை இவன் என்று எண்ணிக் கூறிச் சூரியன் முதலாக வணங்குவார் அனேவருடைய சிந்தைக்குள்ளும் அச் சிந்தையே தான் தன் இயல்பு வெளிப்பட உறையும் கோயி லாகக் கொண்டு விளங்குகின்றவனே. - -

எந்தை - எம் தந்தை. இரவி - சூரியன். முதலா - முதலாக, இறைஞ்சுவார் - வணங்குபவர்களுடைய. சிங்தையுள்ளே . உள். ளத்தினுள்ளே. கோயிலாக . அந்தச் சிங்தையே தான் உறையும் கோயிலாக. திகழ்வானே. விளங்குபவனே.) . . .

- - Yor -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/66&oldid=597015" இலிருந்து மீள்விக்கப்பட்டது