பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு கோயில்கள் 6i,

ப்படி இரவி,முதலோர் வணங்க அவர்தம்

சிங்தையே கோயிலாகத் திகழும் சிவபெருமான் புறத்தே உள்ள கோயிலிலும் திகழ்கிறன். அந்தக் கோயிலில் வழிபடுவார் யார்?

சிந்தையுள்ளே தியானித்து இறைவனே வழி, படுதல் எளிதன்று. இாவி முதலானவர்கள் பல காலம் சாதனம் பண்ணி அவனேத் தியானிக்கும் நெறி கைவரப் பெற்ருர்கள். எல்லோருமே எடுத்த வுடன் தம் சிங்தையை இறைவன் கோயிலாக்கி விட முடியாது. அந்தத் தகுதி இல்லாதவர்களும் கண்டு வணங்குவதற்கு ஏற்றபடி இறைவன் அங்கங்கே திருக்கோயிலில் சிவலிங்கப்பெருமானகவும், நடராஜ மூர்த்தியாகவும், பிறவாறும் எழுந்தருளியிருக்கிருரன். அப்படி எழுந்தருளியிருக்கும் கோயில்களில் திரு. முதுகுன்றக் கோயில் ஒன்று. இது கடு காட்டில் உள்ள கலம். இப்போது விருத்தாசலம் என்று. வழங்குகிறது. பழமலையென்றும் இலக்கியங்களில் இதன் பெயர் காணப் பெறும். -

முதுகுன்றக் கோயிலில் அன்புள்ள மக்கள் வந்து வழிபடுகிருரர்கள். அன்பர்கள் வழிபடுவதைக் கண்டு. மற்ற மக்களும் வழிபடத் தொடங்குகிருரர்கள். நாள டைவில் அவர்களும் அன்பர்களாகி விடுகிருரர்கள். காங்கத்தோடு உரசி உரசி இரும்பும் காந்த சக்தி, யைப் பெற்று விடும். அப்படி அன்பர்களின் கூட் டத்தோடு கலந்து கொண்டு வழிபடும் மக்களுக்கும். அன்பு உண்டாகி வளர்கிறது. ஓரிடத்தில் திருக் கோயில் இருந்தால் அதைச் சுற்றி உள்ள மக்கள் அன்பு பூண்டு வழிபடும் பழக்கத்தை மேற்கொள் o கிருரர்கள். ஒர் இடத்தில் ஏரி இருக்குமாயின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/67&oldid=597017" இலிருந்து மீள்விக்கப்பட்டது