பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வதுமுன் காத்தல் 79

பTதுகாப்பு வேண்டியதுதான். அது எங்கே இ ரு க் கி ற து? அதைப் பெற என்ன செய்ய வேண்டும் ? - - 'நீங்கள் சீகாழியை அடையுங்கள்’ என்று உபதேசிக்கிருர் ஆளுடைய பிள்ளையார்.

காழி சேர்மினே.

எங்கும் வெள்ளம் சூழும்போது மேடான இடத் துக்குச் சென்று தங்களைப் பாதுகாத்துக் கொள் வது உலக இயல்பு. 'முதுமை வந்து நோயால் துன் புற்று மரணம் என்னும் பெருவெள்ளம் நம்மை அடித்துக் கொண்டு போவதற்கு முன் இந்த மேடான இடத்துக்குப் போய் விடுங்கள்' என்று சொல்கிருர் சம்பந்தர். அது உண்மையில் பிரளயத் திலே மிதந்த இடங்கானே?

காழிக்குப் பெருமை வக்கது அங்கே இறைவன் எழுந்தருளியிருப்பகல்ைதான். "எமக்குத் தலைவ ராகிய கடவுள் அங்கே இருக்கிரு.ர். அது பாதுகாப் பான இடம். அங்கே போய்ச் சேருங்கள்' என்று. கூறுகிருர் சம்பந்தர். - - . - சம் கருத்தர் காழி சேர்மினே. - அந்தக் கருத்தர் கம் செயலாலும் கோலத்கா

லும் வேறு யாருக்கும் இல்லாத சிறப்புடையவர். கண்கள் இருந்தும் காணமுடியாமற் செய்வது முதுமைப் பருவம்.கண்கள் பார்த்தாலும் அது பார்க் கும் பார்வை உண்மைப் பார்வை அன்று. புறக்கண் ணும் பார்க்கும் பார்வையைவிட அகக் கண்ணுகிய அறிவினலே காணும் பார்வையே சிறப்பானது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/85&oldid=597053" இலிருந்து மீள்விக்கப்பட்டது