பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பிரசவ கால ஆலோசனைகள் 'குழந்தை' என்கிற ஒரு தவத்தை-ஓர் அன்பை-ஒரு மந்திரத்தை-ஒர் அற்புதத்தை, பிள்ளைக்கனியமுது எனவும் பேசும் பொற் சித்திரம்' என்றும் ஆடிவரும் தேன்' எனவும் போற்றிப் புகழ்ந்திடும் தண்ணளியும், மோனப் புள கிதமும் பாரதி ஒருவனுக்கே சொந்தம். 'நம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப் பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தைவிட மிகவும் இனிமை உடையதாகும்.’’ இது தமிழ் மறையின் சித்தாந்தம். சுகாதாரம் கடந்த விஞ்ஞானபூர்வமான நடப்பு இது; அனுபவித்த புண்ணிய சீலர்களால்தான் இம் மகோன்னத நிலையை உணர முடியும். - இந்த மகோன்னத நிலைக்கு ஆதாரமாக விளங்கும் 'தாய் தன்னுடைய பேறுகாலக் கண்டங்களைத் தாண்டி: குழந்தையைப் பெற்றெடுத்து, புனர்ஜன்மம் பெறு. வதற்குள், அவள் முன்னே தலைவிரித்தாடும் பிரச்னைகள் ஒன்றா, இரண்டா? அவள் கருத்தரித்ததுமுதல் பிரச விக்கும் வரையிலும் அவள் கண்காணித்துப் பேண வேண் டிய குறிப்புரைகள் ஒன்றல்ல -இரண்டல்லவே! 'விதி'யின் முன் பணயம் வைத்து, பெண் என்பவள் தாயாக உயர்ந்து ஒரு சமூக அந்தஸ்தைப் பெறும் ஓர் அதிர்ஷ்டவசமான நல்வாய்ப்புக்கு முதற்காரணமாகிறது குழந்தை. இக்குழந்தையின் மூலமாக ஆணும் பெண் ஆணும், தந்தையும் தாயும் ஆகி, ஒரு சமுதாய மதிப்புப் பெறும் பாக்கியத்தையும் அடைகின்றனர். "ஆண், பெண் இன உறவின் அச்சுறுத்தும் மிகப் பெரிய பயம், பேறுகாலம்.' என்கிறார் டாக்டர் ஆலன் ği`-lotësoń (Dr. Alan Guttmacher) grôrljaúř. -