பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கருத்தரித்தல் வாழ்க்கையின் வசந்தத் திரு விழா என்று அழைக்கப்படும் முதல் இரவு புதுமணத் தம்பதிகளின் மறக்க முடியாத நினைவை என்றென்றும் எடுத்தியம்பிக் கொண்டேயிருக்கும். இருமணம் ஒன்று சேர்ந்த தம்பதி களின் உடலுறவு இன்பத்திற்கு ஒர் எல்லை கட்டக்கூடிய தாக அமைந்து விடுகிற அவர்களது உடலின் வலுவும்: உள்ளத்தின் பலமும் தாம்பத்திய சுகத்தில் பெரும் பங்கு கொண்டு இயங்குகின்றது. அளவோடு கூடிய, முறை யான உடலுறவு இன்பத்தில் ஈடுபட்டு அமைதியும் ஆனந்தமும் தம்பதியரின் எதிர்காலம் வனப்பும் ஆறுதலும் பெற்றுத் திகழும். . ஜீவதாது எனப்படும் விந்து (semen) புனிதம் நிரம்பிய ஒரு சக்தியாகும். உடலுறவில் உணர்வலைகளின் உச்சக் கட்டத்தில் இவ்விந்து வெளியாவதன் மூலம் ஆண் உணர்ச்சியின் உச்சத்தை எய்தி, சொல்லால் விளக்கிக் காட்ட வொண்ணாத மயக்கமிக்க ஒர் ஆனந்த நிலையை அடைகிறான்; அதே போல, பெண்ணும் தன்னுடைய உணர்ச்சிகள் உச்சநிலையைத் தொட்டு நிற்கையில் அவளும் அதே வித இன்பநிலைக்கு ஆளாகிறாள். இவ் வகையான உடலுறவுச் சுகத்தின் போது, ஆண் தனது ஜீவசத்துகளின் கலவையான விந்தை வெளிப்படுத்தி, ஆசையின் நிறைவேற்றத்தை அடைகிறான். அதாவது