பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை ஆறுமுகம் 27. கருதுகிறார். அவர் மேலும் சொல்கிறார்: “பிரசவம் என்பது வெகு சராசரியான-இயல்பானதொரு நடப்பாக ஆகிவருகிறது இந்த நவீன யுகத்திலே. 1,500 அல்லது 2,000 பெண்களிலே ஒருத்தி மட்டும்தான் பிரசவத்தில் பத்திரமாக உயிர்தப்பிக்கக் கூடாமல் போய்விடுகிறாள். பிரசவப் பராமரிப்புக்கு இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சி பெரிதும் பயன்பட்டு வருகிறது. புதிய ஆபரேஷன் முறைகளும் நூதனமான மருந்துக் கண்டு பிடிப்புகளும் வளர்ச்சியடைந்து வருவதால், சராசரி குடும்பத்தார்களும் கூட வீட்டில் பிரசவம் வைக்காமல் சகல வசதிகள் மிகுந்த, ஜெனரல் ஆஸ்பத்திரிகளையும் நர்ஸிங்ஹோம்களையுமே நாடுகின்றனர். 1920 செம்பாதி அளவு அமெரிக்கக் குழந்தைகள் வீடுகளிலேயே பிறந்தன; ஆனால் இன்றோ, 90% அளவுக்கு சகல வசதிகளும் பெற்ற மருத்துவமனை களில்தான் குழந்தைகள் பிறக்கின்றன இயல்பான சுகப்பிரசவங்கள் (natural child birth) மிகவும் சகஜமாக ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, இங்குள்ள கர்ப்பவதிகளுக்கு பிரசவத்தின்மீதுள்ள அச்சம் குறைந்து வருகிறது!’ - திருமணம் ஆனது முதற்கொண்டு அந்தத் தம்பதி இருவருக்குமே முதற் கனவாக இருப்பது குழந்தைதான். இதற்காக அவர்கள் இருவரும் அனுஷ்டிக்கும் விரதங், களும் செய்யும் தர்மங்களும் ஏராளம். பிள்ளைவரம் கோரி சந்தானபாக்கியம் பெற கேத்திராடனம் செய் வதும் அதிகம். அரச மரத்தைச் சுற்றிப் பூஜைகள் செய்வதும் பாம்புப் புற்றுக்கு பால் வார்ப்பதும். பாலகிருஷ்ணனுக்கு விசேஷப் பிரார்த்தனை புரிவதும் இயல்பு. இத்தகைய போக்குகள் பாரதத்தில் சில சில மாறுதல்களுடன் நிகழ்ந்து கொண்டு வருகின்றன. கணவன்-மனைவி ஆகிய இருவரது உடலும் உள்ளமும் தகுந்த ஆரோக்கியத்துடன் இருந்தால்,