பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பிரசவ கால ஆலோசனைகள் யாதொரு சிரமமும் இல்லாமல், மகப்பேறு அட்ைவார்கள் என்பது மருத்துவ ரீதியான முடிவு ஆகும். ஆனால், இத் தகைய பொது முடிவை மாற்றிவிடச் செய்யக்கூடிய விசித்திரங்கள்தான் நம் நாட்டில் அதிக அளவுக்கு நிகழ் கின்றன. தம்பதி இருவருமே நல்ல உடல்வளத்துடன் இருந்தும்கூட அவர்களுக்குச் சந்தான பாக்கியம் ஏற் படாமல் இருந்து வரும் அதிசயங்களை நாம் காணவே செய்கிறோம். தம்பதி தக்க மருத்துவப் பரிசோதனைகள் அடைந்த பின்னரும்கூட, அப்பெண் கருத்தரிக்கும் நிலையை அடைய முடியாத பரிதாபத்தையும் சில இடங் களில் காணுகிறோம். - - இப்படிப்பட்ட விதிவிலக்குகளுக்குக் காரணம் என்ன?-இவ்வினர் சிந்தனைக்கு உகந்ததாகவே கருதப் பட்டு வருகிறது. இம்மாதிரியானதொரு இக்கட்டில்தான் 'விதி' என்றும் 'தெய்வசித்தம்’ என்றும் நம்பி, அதற் கேற்ப, அதற்குரிய நடவடிக்கைகளில் மனம் செலுத்தி, நம்பிக்கையுடன் ஒழுகி வருகிறார்கள். பிள்ளைப் பேற்றுக் குரிய சில விரதங்களையும், சில பரிகாரங்களையும் அனுஷ்டித்து, புண்ணிய நீராடல் செய்தபின், கச்சிதமாக பிள்ளைப்பேறு அடையும் பெண்களையும் நாம் நிதர்சன மாகக் கண்டு கொண்டுதான் வருகின்றோம். - . கருவுற்ற தாய், கருத்தரித்த நாளிலிருந்து கனவுலகில் தான் சஞ்சரிக்கிறாள். * - கருவுற்றவுடன், கர்ப்பவதி பூசம் நட்சத்திரத்தில் விரதம் இருந்து, தங்கம், வெள்ளியாலான ஆண் பொம் மையைத் தீயிலிட்டு, பிறகு அதைக் கறந்த பசும்பாலில் தோய்த்து, அப்பாலினை அஞ்சலி அமைப்பில் குவிந்த கைகளின் இடைவெளியில் ஊற்றி அதைப் பருகினால், ஆண் குழந்தை ஜனனமாகும் என்றும், ஆல மொக்குகள் எட்டை எடுத்து அரைத்து, கறந்த பாலில் அச்சாற்றை