பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை ஆறுமுகம் 31 அடையவும் குழந்தையே உதவுகிறது. இன்பம் தரத்தக்க இளங்குழந்தைகளைப் பெற்றவர்கள் நடுநிலையினின்றும் தவறாதவர்கள் என்பதும், இளங்குழந்தைகள் இல்லா தவர்கள் நடுநிலையினின்றும் தவறியவர்கள் என்பதுவும் வள்ளுவர் வாக்கு ஆகும். குழந்தை இன்பம் சொல்லச் சொல்லத் திகட்டாத இன்பம்தான். . ஆனால் சூலுற்ற பெண் தன் கருவில் உருவாகி வரும் குழந்தை ஆணா, பெண்ணா என்று அறிவதில் நாட்டம் மிகக் கொள்கிறாள். தன் குலத்தை விளங்கக் செய்யதனக்கு எள்ளும் தண்ணிரும் இறைக்க-ஒர் ஆண் குழந்தை வேண்டுமென்று தந்தை கருதுகிறான். தாயோ, தன்னுடன் இருந்து உதவி ஒத்தாசை செய்ய பெண் குழந்தை வேண்டுமென்று ஆசைப்படுவாள். இம்மாதிரி. யான வேறுபட்ட குறிககோள்கள் சாதாரணமான நிலை யுடன்தான் அமைகின்றன. ஆனால் குழந்தைப் பாசம் மிக்க ஆணும் பெண்ணும் அதாவது, தந்தையும் தாயும் ஆண் குழந்தைதான் வேண்டுமென்றோ, அல்லது பெண் குழந்தைதான் வேண்டும் என்றோ பாகுபடுத்திக் கனவு கான்பதோ, உள்ளுற ஆசைப்படுவதோ இல்லை. சுமப் பவளுக்கு சுமைக்குரிய புலன் கிட்ட வேண்டுமென்றுதான் இதயத்துள் ஏங்குவாள்? மனைவிவன் பிரசவக் கஷ்டங் களை உண்ர முடிந்த கணவனும் அவ்வாறுதான் நினைப் பான் என்றாலும், ஆண் குழந்தை என்றால் உலகிலேயே. அதற்கு ஒரு தனி மவுசு உண்டு என்பதை யார்தான் மறுக்க முடியும்? - * குடும்பத்தின் பாரம்பரிய முறை வழுவாமல் அந்தந்தக் குடும்பத்துத் தலைவர்களும் தலைவிகளும் மாறாமல் அவரவர் சந்ததிகளுக்குப் பிறக்கிறார்கள் என்பதும் மரபு.