பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பிரசவகால ஆலோசனைகள் வழிப்பட்ட நடப்பாகும். இதையொட்டித்தான் பாட்டன் பெயரையும் பாட்டி பெயரையும் பேரனுக்கும் பேத்திக்கும் சூட்டி மகிழுவதும் வமிச வழிப்பண்பாடாகக் கைக்கொள்ளப் படுகிறது. கருவிலிருக்கும் சிசுவின் ஆண் பெண் இனப்பாகுபாடு கருவுற்ற நான்காவது மாதத்தில் நிர்ணயிக்கப்படுகிறது. டாக்டர் விக்மண்ட் ஃப்ராய்டு சொல்கிறார்: 'குழந்தையின் பாரம்பர்யத் தன்மைகள் தகப்பன் மூலமாகவோ, தாய் மூலமாகவோ அமைகின்றன. தாய் தந்தையின் உயிரணுக்களில் (Cells) உள்ள கணுக்கோல் களில் (Chromosomes) பாதி, அதன் தந்தையிடமிருந்தும், மறுபாதி அதன் தாயிடமிருந்தும் வந்தவை. இதை யொட்டித்தான் கருப்பச்சிசு (fetus)வின் ஆண் பெண் தன்மை அமையும்.’’ குழந்தையின் ஆண், பெண் தன்மை அதன் தாய் தந்தையின் உடல்-உள்ள வாகைப் பொருத்து அமை கின்றது. இந்த ஆண், பெண் தன்மையின் வேறுபாடுகள், அச்சிசு கருவில் உருவாகும்போது, அக்கருவில் சேமிக்கப் பட்டுள்ள சத்துகளில் பாகுபாட்டுணர்வுகளின் தராதரத் துக்கும் தாரதம்மியத்துக்கும் உகந்தரீதியில் அமைகின்றன. கருப்பிண்டத்தின் தந்தையானவன், நல்ல உடற்கட்டும் உறுதியான மனமும் கொண்டிருந்தால், பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கும் என்றும், தாய் ஈரம்மிக்கவளாகவும், மென்மைமிக்க உடலும் உள்ளமும் உடையவளாகவும் இருந்தால், பிறப்பது பெண் குழந்தையாக இருக்கும் என்றும் கருதப்படும். ஆண் சூடான உணவை உண்டு, கடினமாக உழைத்தால் அவனுக்குப் பிறப்பது ஆணர் கவும், ஈரம்மிக்க உணவை உட்கொண்டு உழைக்காவத ஆனாக இருப்பவனுக்குப் பிறப்பது பெண்ணாகவும் இருக் கும் எனவும் கருதப்படும். -