பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை ஆறுமுகம் 55 ஊட்டம் கிடைக்கிறது என்பதை மீண்டும் ஞாபகப் படுத்திக் கொள்ளவேண்டும். மலஜலம் ஒழுங்காக வெளி யேற வேண்டும். உணவில் அதிக நாட்டம் பிடிக்காது. என்றாலும், அதற்குப் பதிலாக பழவகைகள் சாப்பிட லாம். தேன், எலுமிச்சை இரண்டும் மசக்கை”க்கு மாற் றாக அமையும். அளவுடன் தாம்பூலம் தரிப்பதைத் தொடரலாம். நல்ல தூக்கம், நிறைந்த காற்றோட்டம், ஒய்வு, மகிழ்ச்சி நிறைந்த மனப்பாங்கு, லகுவான தேகப் பயிற்சி, முடிந்த அளவு உழைப்பு ஆகியவையும் துணை செய்யும். இந்நிலையைக் கண்காணிப்பது கணவர்களின் உயிர்க் கடனல்லவா? - தாய் நல்ல தூய ரத்தவோட்டம் கொண்டவளாக இருக்க வேண்டும். ஆகவே அவளது பற்கள் சொத்ன்த அடையாமலும், உள் நாக்கு புண்பட்டு வளராமலும், தொண்டையில் சதை வளராமலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மலச்சிக்கலைத் தவிர்க்க வேண்டும். நீர்ப்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கருத்தரித்த பிறகுகூட முதல் மாதத்தில் சிலருக்கு ரத்தம் வடிவதுண்டு. அக்காலத்தில் சற்று சுகவீனம் உண்டாகும். தகுந்த போஷாக்கினால் எல்லாம் சரியாகி விடும். - w அத்தை, பாட்டி கதைகளைக் கேட்காமல் லேடி டாக்டர்களின் யோசனைகளைக் கேட்க வேண்டும். கருவுற்ற பெண்கள்-தாயாகப்போகும் கர்ப்பவதிகள் 'அம்மா' என்ற இன்னொலி கேட்க விழைவார்கள்ஆகவே அவர்கள் மற்ற எவ்விதப் பயத்தையும் வளர்த்துக் கொள்ளாமல், தன்னம்பிக்கையுடனும் சந்தோஷத் துடனும் புதிய ஜீவனை வரவேற்பதில் கண்ணும் கருத்து மாக இருக்கவேண்டும். அனுப்பிரமாணமுள்ள ஒரு சிறு