பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பிரசவ கால ஆலோசனைகள் முட்டை, மானுடரூபம் எடுத்து அவதாரம் பூனும் மகிம்ைக்கு ஈடேது? பார்த்தீர்களா, அதற்குள் முப்பது நாள்கள் மாயமாக மறைந்து விட்டனவே! - - 2. இரண்டாம் மாதம் மசக்கை'யின் ஆட்சி ஆரம்பிப்பது இரண்டாம் மாதத்தில்தான். இப்போதுதான் அதன் வேலைகள் சுறுசுறுப்படையத் தொடங்கும். மசக்கை என்பது எவ் வகை நோயும் அன்று. கருப்பையில் விளைந்திருக்கும் ஒரு மாற்றத்திற்கு-உடல் ரீதியானதொரு விந்தையான மாறுதலுக்கு ஒர் அறிகுறியாகவும், அந்த மாறுதலின் விளைவாகவுமே மசக்கை உண்டாகிறது. சிலருக்கு கருத்தரித்த அன்றே மசக்கை உண்டாகும். பெரும்பாலும் மூன்று மாதங்களின் முடிவுக்குள் அது தீர்ந்துவிடும். வாந்தி ஏற்படுவதுதான் இயல்பு. முதற். பிள்ளைக்குத் தாயாகப் போகிற பெண்களுக்கு மசக்கை யின் கெடுபிடி கூடுதலாகவே இருக்கும். புளிப்பு எக்கச்சக்கமாகத் தேவைப்படும். அந்தத் தேவையே ஒரு வெறியுணர்வாகவும் இருக்கும். மசக்கை என்பது எந்த வகையான வியாதியையும் சேர்ந்ததன்று: கருப்பையிலும் அதை ஒட்டிய குடல் பகுதி களில் ஏற்படும் மாறுதலின் விளைவாகவே இது ஏற்படுவ தால், ஒழுங்கான முறையில் உணவு வகைகளைச் சாப்பிட்டு தக்கபடி ஒய்வுகொண்டு, உடல் நலம் பேணி னால் மசக்கையைச் சமாளித்துவிடமுடியும். பலவீனமான வர்களுக்குத்தான் மசக்கையின் தொல்லை அதிகமாக