பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பிரசவ கால ஆலோசனைகள் இப்பழங்கள் உதவமுடியும். நல்ல நித்திரை, பரிசுத்தமான காற்று, அளவான தேகப் பயிற்சி முதலியன நல்லது. பேரீச்சம் பழங்கள், தக்காளி, திராட்சை, அத்தி முதலி யன உடம்புக்கு நல்லவை. இவை ரத்தம், மூளை, எலும்பு, நரம்புகளுக்கு ஊக்கமும் ஊட்டமும் தரும். வயிற்றுக் குமட்டல் வாந்தியைப்போக்க வைட்டமின் பி-சத்துப் பொருள்கள் உதவும். மார்பகங்கள் பெரிதாகா விடினும் ஒருவித நமைச்சல் இருக்கும். அவை பளுவாகவும் கெட்டியாகவும் விறைத்தி ருப்பவை போலவும் தோன்றும், மிருதுவாயும், நோயுட னும் கூடியதாக இருந்தால், வெந்நீர் ஒத்தடம் கொடுத்து விளக்கெண்ணெய் தடவித் தேய்த்து விடலாம். அவற் ற்ைத் தொங்கவிடாமல், மேலே தூக்கிப்பிடித்த விதத்தில் கச்சை கொண்டு கட்டிவைக்கலாம். இப்போதுதான் முலைகள் பருத்து முலைக்காம்புகள் கறுப்படையும். சிலருக்கு கர்ப்பம் தரித்த பிறகுங்கூட, முதல் இரண்டு மாதங்களில் தூரமாகும் நாள்கள் வரும்போது, சிறிதளவு உதிரம் வெளியாவதுண்டு. இதனால் அச்சப்படத் தேவை யில்லை; உடலுக்கு ஆயாசம் தரும் அலுவல்களைச் செய்யக்கூடாது. அடிக்கடி சிறுநீர்க் கழிவு ஏற்படும். இதுவும் சில வாரங்கள் வரை நீடித்து அப்பால் நின்றுவிடும். அவ்வாறு நிற்காவிடில், டாக்டரம்மாக்களை நாடவேண்டும். களைப்பு மிகுதிப்படும். சதாதாக்கம் ഖത്രി. நாளாக ஆக, சில தருணங்களில் தாயாகப் பதவி உயர்வு பெற விருக்கும் பெண்களுக்கு எதைக்கண்டாலும் ஓர் எரிச்சல்