பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பிரசவ கால ஆலோசனைகள் இவ்வுடல் சேர்க்கையினை நிறுத்திக்கொள்வது முக்கியம். இதைக் கணவன்மார்கள் மறந்து விடலாகாது. இம்மாத இறுதியில் சிசு ஒன்பது முதல் பத்து அங்குலம் இருக்கும். பதினோறு அவுன்ஸ் எடைஇருக்கும். அதன் தசைநார்கள் நன்கு அமைந்து, அது உள்ளுக்குள் வேகமாக உதைத்துக் கொள்ளுகிறது. இதைத் தாய் நன்கு உணர முடியும். சிசுவின் சலனத்தை முதன்முதலாக தாய் இப்போதுதான் உணர்கிறாள். - - மயிர், நகம் வளரத் தொடங்கியிருக்கும். கல்லீரல் உண்டாகும். அதில் பித்த நீர் ஊறத்தொடங்கும்;குடலும் உண்டாகியிருக்கும். . - சிசுவின் வேகமான இருதயத்துடிப்பை டாக்டர்கள் நிச்சயமாக உணர முடியும். தன் ஊட்டம்தான் தன் சிசுவுக்கு மிகவும் உதவி வருகிறது என்னும் உண்மையின் சக்தி இப்போது முன்னைவிட அந்தக் கருப்பவதிக்கு-தாய்க்கு-மிகவும் பலமான அடிப்படையில் புரியத் தொடங்கும் வேளை அல்லவா இது! - உடல் நிலை மாறுதல்களையும் இயற்கையின் முன் னெச்சரிக்கைகளையும் அனுசரித்து, குழந்தையின் எதிர் கால வளர்ச்சியையும் கருத்தினில் பதித்துக் கொண்டு, முந்திய மாதங்களில் கைக்கொண்ட உணவு, ஒய்வு, உழைப்பு, பயிற்சி, தூக்கம் போன்றவற்றை அனுசரித்துப் பின்பற்ற வேண்டும். காயங்களில் ரத்தம் வீணாகக் கூடாது. உபவாசம் கூடாது, கோபதாபம் கெடுதல். நாளாக ஆக, சிலர் நித்திரையின்மையால் அவதிப் படலாம். அவர்கள் டாக்டர்களை அணுகுதல் நல்லது. கைகால் வலி இருக்கும். தானுந்தர தைலம் தடவ லாம். - - - - ...