பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பிரசவ கால ஆலோசனைகள் 6. ஆறாம் மாதம் இப்பொழுது குழந்தை அதனுடைய நீர் நிரம்பிய தொட்டிலில் ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருக் கிறது. - கர்ப்பக்குழவி 12-13 அங்குல நீளம் இருக்கும். கருப்பை தாயின் தொப்புள் வரையில் உயர்ந்திருக்கும். தலை எலும்புகள் வளர்ந்து வரும். எடை இரண்டு பவுண்ட் இருக்கும். கருவிலுள்ள குழந்தையின் உடற் கூட்டின் எலும்புகள் எக்ஸ்ரே (X-ray) படத்தின் வாயி லாக அறியப்பட முடியும். முலைகளில் அதிகப்படியான கறுமை தெரியும். - மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண் டும். வைட்டமின் வகைச் சத்துகள் நிரம்பிய ஆகாரங் களையே அளவுடன் உட் கொள்ள வேண்டும். சரிவிகித உணவு (balanced diet) தான் உகந்தது. குழந்தையின் எலும்பு, தசைநார் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் ஊட்டம் இருந்தாக வேண்டும். இப்போது வைடமின் ஏ-வைட மின் டி-ஆகிய இரு சத்துள்ள பொருள்களும் மிகவும் பயன் தரும். பால், வெண்ணெய், பழரசம், முட்டை, எலும்பு சூப், மீன், தவிடு போக்காத அரிசி, கோதுமை ஆகியவற்றைப் புசிப்பது நல்லது. பாதாம் பருப்பு, ஆப்பிள், சாத்துக்குடிப் பழம், எலுமிச்சை தேன்நல்லது. . . . . - கருப்பையின் வளர்ச்சியை ஒட்டி, அதற்கேற்ப உடை களைத் தளர்த்திக் கட்டிக்கொள்ள வேண்டும். ஆறாவது மாதத்திலிருந்து பிரசவமாகும் நாள் வரை அணிந்து கொள்ளவென்று கொஞ்சம் தளர்த்தியான சோளிகளை உபயோகிப்பது உகந்தது ஆகும்.