பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கற்பலங்காரி துயரம்

59

மனையில் பிரவேசித்தாள். அரண்மனைக் காவற்காரர்கள் இவள் யாரோ தேவியென்று அவளைத் தடுக்க மனம் வராமல், உள்ளே விட்டுவிட்டார்கள்.

"அவள் மங்கம்மாளுடைய கொலு மண்டபத்தை நோக்கி "மகாராணியே அபயம்! மண்டலேஸ்வரியே அபயம்!! மங்கையர்க்கரசியே அபயம்!!! உலகநாயகியே அபயம்!!!!" என்று ஓலமிட்டு, சிம்மாசனத்தின் அடியிற் போய் விழுந்தாள். சில நாளாய் அன்னம் ஆகாரமில்லாதபடியாலும், நாற்காத வழியும் ஒரே ஓட்டமாய் ஓடி வந்தபடியாலும், தேக ஸ்மரணை தப்பி மூர்ச்சையாய் விட்டாள். அப்போது சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்த மங்கம்மாள், உடனே இறங்கி, அவளைக் கட்டித் தழுவி அவளுடைய மூர்ச்சை தெளியும்படி சைத்தியோபசாரங்கள் செய்வித்து மூர்ச்சை தெளிந்தவுடனே, அவள் கையைப் பற்றி அழைத்துக் கொண்டுபோய்த் தன் பக்கத்தில் இருத்தி, அவளுடைய குறையைத் தெரிவிக்கும்படி உத்தரவு செய்தாள். கற்பலங்காரி, அந்தச் சிற்றரசன் செய்த கொடுமைகளை வியக்தமாக விக்ஞாபித்த உடனே மகாராணிக்குத் தன் தம்பி மேல் உக்கிர கோபாக்கினி மூண்டு, அவனையும் சாட்சி முதலானவர்கலையும் உடனே கொண்டுவரும்படி, குதிரைப் பட்டாளத்தைச் சேர்ந்த நூறு போர்வீரர்களைப் புதுக்கோட்டைக்கு அனுப்பினாள். அந்தத் துஷ்ட அரசன் மங்களாகாரம் பிள்ளையைக் கொல்வதற்காகக் கொலைக்களத்திலே கொண்டுபோய் வைத்துக் கொண்டு, இராணியினுடைய உத்தரவை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தான். அந்தச் சமயத்தில் நூறு போர்வீரர்களும் போய்ச் சேர்ந்து, இராணியினுடைய உத்தரவைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்டவுடனே, அந்த அரசனுக்குக் கோபமுண்டாகி, அந்தப் போர்வீரர்களின் மேல் பாய்ந்து, அவர்களில் இருவரை வெட்டிக் கொன்றுவிட்டான்; மற்றவர்கள் எல்லாரும் அவனைப் பிடித்து, நிராயுதபாணி ஆக்கிப், பின்கட்டு