பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

பிரதாப முதலியார்‌ சரித்திரம்‌

அவர்கள் எண்ணி, ஆளுக்கு இரண்டாயிரம் வராகன் வீதம் எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். இதைக் கண்டவுடனே மலத்தைக் கண்ட நாய்க்கு வாயூறுவதுபோல், கருணானந்தம் பிள்ளை மகளும் மருமகனும் வாயூறிக்கொண்டு, மலைத்து ஸ்தம்பித்துப் போயிருந்தார்கள். ஒரு நிமிஷத்தில் நாலாயிரம் வராகன் கடன் கொடுப்பாரானால் இவருடைய செல்வம் எவ்வளவு பெரியதாயிருக்க வேண்டும்? இதை நாம் அறியாமற் போய்விட்டோமே என்று பெருமூச்சு விட ஆரம்பித்தார்கள். அந்தப் பணத்தைக் கண்டவுடனே, அவர் மேலே மகளுக்கும் மருமகனுக்கும் அத்தியந்த விசுவாசமுண்டாய் விட்டது. அவர் அந்தச் சமயத்தில், அவர்களை ஆயிரஞ் செருப்பாலே அடித்தாலும் பட்டுக் கொள்வார்கள்.

மாமனாருக்குக் குலாம் போடும்படி, மருமகன் தன் பெண்சாதிக்குக் கண்சாடை காட்டிவிட்டுப் போய்விட்டான். அவள் தகப்பனாருக்குத் தூபம் போட ஆரம்பித்தாள். எப்படியென்றால், தகப்பனாரைப் பார்த்து, "ஐயாவே! எங்களுடைய வாழ்வுகளெல்லாம் உங்களால் வந்த வாழ்வு தானே! நீங்கள் கிருபை செய்யாவிட்டால் நாங்கள் இந்நாள் மட்டும் ஜீவித்திருப்போமா? தாயுந் தந்தையுங் கைகண்ட தெய்வமென்று சகல சாஸ்திரங்களுஞ் சொல்லுகின்றனவே! நீங்கள் சொல்லாமல் எங்களை விட்டுப் புறப்பட்டு வந்த நாள் முதல், எங்களுக்கு நல்ல நித்திரை இல்லை. அன்னம் ஆகாரமில்லை. எங்களை நாங்கள் மறந்திருந்தாலும் இருப்போமேயல்லாமல், உங்களை மறந்த நேரமில்லை. உங்களுடைய தேகம் இளைத்திருப்பதை நான் பார்க்கும்போது என்னுடைய மனம் பதைக்கின்றது!" என்று பல வகையாகத் தப்பு ஸ்தோத்திரஞ் செய்தாள். இவ்வளவும் பணஞ்செய்கிற கூத்தென்று அவர் நன்றாய்த் தெரிந்துகொண்டு, மகளைப் பார்த்து “'விசனப்பட வேண்டாம் அம்மா! உனக்கு ஏதாவது அபேக்ஷை இருந்தால் தெரிவி'” என்று நய வஞ்சகமாகச்