பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

பிரதாப முதலியார்‌ சரித்திரம்‌

என்று அமிர்த வருஷம் போற் பிரசங்கித்தார். அது முதல் உபாத்தியாயர் தினந்தோறும் வராமல் வாரத்துக்கு ஒரு முறைவந்து, எனக்குள்ள சந்தேகங்களைத் தெளிவித்துவிட்டுப் போவார். அவர் ஆஞ்ஞாபித்தபடி நான் ஒரு நிமிஷங் கூடச் சும்மா இராமல், எப்போதும் சிறந்த காலக்ஷேபம் செய்துவந்தேன்.




11-ஆம் அதிகாரம்
ஒன்பது விக்கிரங்களின் கதை
நற்குணப் பெண்டீரே பெருஞ் செல்வம்

ஒரு நாள் என் தாயார் என்னிடத்தில் வந்து "ஒரு முக்கியமான விஷயத்தைக் குறித்து உன்னிடத்திலே பேச வந்திருக்கிறேன். அந்த விஷயம் எவ்வளவு முக்கியமானதென்று நீ தெரிந்துகொள்ளும் பொருட்டு, உனக்கு ஒரு சிறிய கதை சொல்லுகிறேன்" என்று சொல்லத் தொடங்கினார்கள்:

“ஒரு தேசத்தை ஆண்டுவந்த அரசன் இறந்துபோன பிற்பாடு, அவனுடைய ஏக குமாரனுக்குப் பட்டாபிஷேகமாகி, அரசாக்ஷி செய்துவந்தான். அவனுடைய திரவியங்களை எல்லாம் துர்விஷயங்களில் செலவழித்து விட்டு அவன் மனோவியாகுலத்தோடு கூடப் படுத்துத் தூங்கும்போது, ஒரு விருத்தாப்பியன் அவன் முன்பாகத் தோன்றி, "உன் தகப்பனாருடைய பொக்கிஷ சாலைக்குக் கீழே வெட்டிப்