பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணப்‌ பேச்சு

77

"ஞானாம்பாளைக் கொள்ள எனக்கு ஆக்ஷேபமில்லை. நீங்கள் அந்தக் கதையை ஒன்பது விக்கிரகங்களோடே முடித்துவிட்டது ஒரு குறைவாயிருக்கிறது. அந்த ஒன்பது விக்கிரகங்களுக்கும் ஆயிரம் பங்கு மேலாகப் பத்தாவது விக்கிரகம் ஒன்று இருக்கிறது. அதையும் கூடச் சேர்த்துவிட்டால், அந்தக் கதை பூரணமாகும்" என்றேன். நான் யாரைக் குறிப்பிட்டுப் பேசினேனென்று என் தாயார் அறிந்துகொண்டு, அந்த ஸ்தோத்திரத்தைக் கேட்க இஷ்டமில்லாமல் போய்விட்டார்கள். நான் சொன்ன பத்தாவது விக்கிரகம் யாரென்றால் என் தாயார்தான்.




12-ஆம் அதிகாரம்
விவாகம் பேசல்-சம்பந்திகளின் சம்மதம்
குலத்தினும் தனத்தினும் குணமே விசேடம்
காந்தர்வ விவாக கண்டனம்


என்னுடைய சம்மதத்தை என் தாயார் என் தகப்பனாருக்குத் தெரிவித்த வுடனே, என் தகப்பனார் சம்பந்தி முதலியார் வீட்டுக்குப் போய் ஞானாம்பாளை எனக்குக் கன்னிகா தானம் செய்ய வேண்டுமென்று கிரமப்படி கேட்டார். அதற்குச் சம்பந்தி முதலியார், யாதொரு ஆக்ஷேபமுஞ் சொல்லாமல் உடனே சம்மதித்தார். பிற்பாடு நிச்சயதாம்பூலம் மாற்றுவதற்காக, பந்துக்கள் இஷ்டமித்திரர்களுக்கெல்லாம் தாம்பூலம் அனுப்பி, அவர்கள் எல்லாரும் சம்பந்தி முதலியார் வீட்டில் வந்து