பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காந்தர்வ விவாக கண்டனம்‌

83

இந்தக் கடிதத்தை அனுப்பினேன். ஆனால் அவளுடைய மறுமொழியைப் பார்த்த உடனே என்னுடைய ஆசை நிராசையாய்ப் போய் விட்டது. அந்த மறுமொழி வருமாறு:—

என் பிரியமுள்ள அத்தான்

தாங்கள் அனுப்பிய கடிதத்தைப் பார்த்துத் துக்க சாகரத்தில் முழுகினேன். தாங்கள் எனக்கு எழுதிய கடிதம் போல், ஒரு தாசிக்குக் கூட ஒருவரும் எழுதத் துணியார்கள். என்னிடத்தில் என்ன துர்மார்க்கத்தைக் கண்டு, அப்படிப்பட்ட கடித்தை எனக்கு எழுதினீர்கள்? நாம் இருவரும் எங்கேயாவது போய், அந்தரங்கத்தில் கலியாணத்தை முடித்துக்கொள்ளலாமென்று எழுதி இருக்கிறீர்கள். விவாகம் இல்லாத ஒரு கன்னிகையும் பிரமசாரியும் சேர்ந்துகொண்டு வெளிப்படுவதினால் உண்டாகிற அவமானமும், அபவாதமும் உலகம் உள்ளவரையில் நீங்குமா? என்னை இந்த அவமானத்துக்கு உட்படுத்த, நான் உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன்? இந்த விஷயத்தில் புருஷர்களுக்குண்டாகிற அவமானத்தைப் பார்க்கிலும், ஸ்திரீகளுக்குண்டாகிற அபவாதம் நூறு பங்கு பெரிதென்று தாங்கள் ஏன் யோசிக்கவில்லை? ஐரோப்பியர்களுக்குள்ளே நடக்கிற காந்தர்வ விவாகத்தைப் புகழ்ந்து பேசுகிறீர்கள். அவர்களுக்குள்ளே பெண்ணுக்கும் புருஷனுக்கும் வயது முதிர்ந்த பின்பு விவாகம் நடப்பதுந்தவிர, விவாகத்துக்கு முன்பு அவர்கள் ஒருவரை ஒருவர் அந்தரங்கத்தில் சந்திப்பதும், சம்பாஷிப்பதும் வழக்கமாயிருக்கின்றது. ஸ்திரீ புருஷர்கள் ஒருவரை ஒருவர் பாராமலே அதிபால்யத்தில் கலியாணம் நடக்கிற வழக்க முள்ள இத்தேசத்துக்குக் காந்தர்வ விவாகம் தகுதியா?விவாகத்துக்கு முன்பு ஸ்திரீ புருஷர்களுக்குள் நடக்கிற அந்தரங்க சல்லாபத்தினால் விளைகிற தீமைகளைக் குறித்து, ஐரோப்பியர்களே முறை-

6