பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நினையாத்‌ திருமணம்‌

83

மார்கள் எவ்வளவும் கவனிக்காவிட்டால், அப்படிப்பட்ட விவாகத்தைப் பிள்ளைகள் நிராகரிக்கலாமென்று அவள் எழுதிய ஒரு வாக்கியமட்டும், கொஞ்சம் நம்பிக்கைக்கு ஆஸ்பதமாயிருந்தது. தண்ணீரில் வீழ்ந்து தத்தளிக்கிறவர்கள் ஒரு துரும்பு அகப்பட்டாலும் அதைப் பிடிப்பதுபோல, நான் அந்த அற்ப நம்பிக்கையைக் கொண்டு என் மனதைத் திடப்படுத்திக் கொண்டேன். அவளுடைய கடிதத்தின் முதற்பாகங்கள் கோபமாயிருந்தாலும், “நீங்கள் செய்த உபகாரத்தை மறவேன்” என்கிற கடைசி வாக்கியத்தைக் கொண்டு அவள் கோபம் தணிந்துவிட்டதாக நிச்சயித்துக் கொண்டேன்.




13-ஆம் அதிகாரம்
நினையாக் கலியாணம்

ஞானாம்பாள் என்னைத் தவிர வேறொருவருக்கு மாலை சூட்டச் சம்மதியாளென்று நான் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் போது சம்பந்தி முதலியார் ஒரே பிடிவாதமாய்ப் பல இடங்களில் விசாரித்து முடிவில் தன் மகளைத் திருநெல்வேலியிலிருக்கும் வீரப்ப முதலியார் குமாரன் சந்திரசேகர முதலிக்கு விவாகஞ் செய்யத் தீர்மானித்தார். அதனைக் கேள்விப்பட்ட உடனே என் தகப்பனாருக்கு ஆக்கிரகம் உண்டாகி, எனக்குக் கோயமுத்தூரிலிருக்கும் சொக்கலிங்க முதலியார் மகள் பூங்காவனத்தை மணஞ் செய்கிறதென்று நிச்சயித்தார். சித்திரை மாசம் இருபத் தெட்டாம் தேதி காலை ஆறு மணிக்குச் சுபமுகூர்த்தம் செய்கிறதென்று, சம்பந்தி