பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாமி நாத்திகள்‌ கொடுமை

101

தூர தேசத்தில் வாழ்க்கைப் பட்டிருந்த என்னுடைய நாத்தனார் புருஷன் பிராண வியோகம் ஆனதாகச் சமாசாரம் வந்தபடியால் என் மாமியார் அந்த ஊருக்குப் போய்விட்டாள். அவள் திரும்பிவரப் பத்து மாசம் சென்றது. அந்தப் பத்து மாச காலமும் நானும் என்னுடைய பர்த்தாவும், தேகமும் சீவனும் போலவும், கரும்பும் ரசமும் போலவும் அதிகப் பிரீதியாக வாழ்ந்தோம். எங்களுடைய சந்தோஷம் நீடித்திருந்தால், இந்த உலகமே சதமென்று நாங்கள் எண்ணிவிடுவோம் என்றோ, அல்லது வேறென்ன காரணமோ எங்களுடைய சந்தோஷத்தைக் கடவுள் மாற்றிவிட்டார்; எப்படி யென்றால் பத்து மாதத்திற்குப் பிறகு என்னுடைய மாமியாரும் அமங்கலியாய்ப் போன அவளுடைய மகளும் வந்துசேர்ந்தார்கள். அவர்கள் எங்களுடைய கிருகத்தில் வந்து பிரவேசித்தது கிரகசாரமே வந்து பிரவேசித்ததுபோல் ஆயிற்று. அவர்கள் வந்து நுழைந்தபோது நானும் என் பர்த்தாவும் அதிக நேரமாகச் சல்லாபித்துக்கொண்டிருந்தோம். அதைக் கண்டவுடனே அவர்களுக்குக் கோபம் பொங்கி அவர்கள் எங்களைப் பார்த்த கடூரமான பார்வை ஆயிரங்கத்தி வெட்டுக்குச் சமானமாயிருந்தது. அந்தப் பார்வையில் நாங்கள் பட்டுப் போகாமல் பிழைத்தது யார் செய்த புண்ணியமோ தெரியவில்லை. நான் அவர்களைக் கண்டவுடனே அவர்களுக்கு நமஸ்காரஞ் செய்து அப்பாலே போய்விட்டேன். என் மாமியார் என் பர்த்தாவை நோக்கி “நான் உன் தகப்பனாரை விவாகஞ்செய்து இருபது வருஷம் வரைக்கும் மங்கிலிய ஸ்திரீயாயிருந்தேன்; நான் இருபது வருஷ காலத்திலும் இரண்டு வார்த்தைகள் கூட என்னுடைய நாயகரிடத்தில் நான் பேசி அறியேன். புருஷன் வீட்டில் வந்து அடி வைத்த உடனே நாத்தனார் புருஷனைத் தின்றுவிட்டவள் இடத்தில் உனக்குப் பேச்சா?” என்றாள். உடனே என் பர்த்தா ‘“நாத்தனார் புருஷன் இறந்து போனால் என் பெண்சாதி’ என்ன செய்வாள்? நான் என் பெண்சாதி