பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாமியார்‌ சறையினின்று விடுதலை

107

லாபம் இதுதான்” என்றார்; அந்தச் சமயத்தில் என் கணவர் வந்து, என் தகப்பனாருக்கு நமஸ்காரஞ் செய்தார். அவரை என் தகப்பனார் பார்த்து “நீ சௌரியவானென்று பெயர் வைத்துக் கொண்டு, உன் வீட்டுப் பெண்டுகளை அடக்கத் திறமையில்லாமல் என்னை வரும்படி, பல கடிதங்கள் அனுப்பினாய்! இரண்டு துர்ப்பலமுள்ள ஸ்திரீகளை அடக்கச் சக்தி இல்லாத நீ யுத்தரங்கத்தில் உன்னுடைய சத்துருக்களை எப்படிச் செயிப்பாய்” என்று பரிகாசஞ் செய்தார். என் புருஷன் என் தகப்பனாருக்குக் கடிதம் எழுதி வரவழைத்ததாக என் தகப்பனாருடைய வார்த்தைகளால் வெளிப்பட்டபடியால் என் புருஷன் மீது எனக்குண்டாயிருந்த மனஸ்தாபங்களெல்லாம் ஒரு நிமிஷத்தில் பறந்துவிட்டன. என் தகப்பனாரும் பர்த்தாவும் என் விலங்குகளைத் தறித்து என் மாமியார் எனக்கு நியமித்திருந்த காராக்கிரகத்தினின்று என்னை விடுதலை செய்தார்கள். உடனே வைத்தியமும் தொலைந்தது; பைத்தியமும் தொலைந்தது; பேயும் பறந்தது. நோயும் பறந்தது. நான் பழையபடி என் பர்த்தாவை அடிக்கடி சந்திக்கவும், அவருடன் சம்பாஷிக்கவும் ஆரம்பித்தேன். இராக் காலங்களில் என் பர்த்தாவினுடைய பள்ளி அறைக்கு என் மாமியும் நாத்தியும் செய்துவந்த காவலும் ஒழிந்தது. என்னுடைய ஆவலும் ஒழிந்தது. அவர்களிருவரும் என் பிதா வந்தது முதல் பெட்டிப் பாம்பு போல் அடங்கினார்கள். என்னுடைய கர்ப்பம் நாள் தோறும் முதிர்ந்து பத்தாம் மாதத்தில் பால சூரியனைப் போல் ஒரு பாலனைப் பெற்று, நான் மனோரம்மியமாயிருக்கும்போது மறுபடியும் ஒரு தௌர்ப்பாக்கியம் எனக்கு நேரிட்டது. அஃதென்னவெனில் இராஜாங்கத்தாருக்கும் அவர்களுடைய சத்துருக்களுக்கும் தூரதேசத்தில் யுத்தம் நேரிட்டதால், அந்த யுத்தத்துக்கு உடனே போகும்படி என் பர்த்தாவுக்கு உத்தரவு வந்தது. தண்டிலே போனால் இரண்டிலே ஒன்றாத-