பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

பிரதாப முதலியார் சரித்திரம்

லால் அந்த உத்தரவைக் கண்ட உடனே, எங்களுக்கெல்லாம் பெரிய இடி விழுந்ததுபோல் இருந்தது. என்னுடைய பர்த்தா சண்டைக்குப் போய்த் திரும்பிவருகிற வரையில் என்னையும் என் பிள்ளையையும் என் தகப்பனார் தம்முடைய ஊருக்கு அழைத்துக்கொண்டு போய்ச் சம்ரக்ஷிப்பதாகச் சொன்னார். அதற்கு என் புருஷனும் சம்மதித்து, அவரும் எங்களோடு கூடப் பிரயாணப்பட்டு என்னையும் என் பிள்ளையையும் என் தகப்பனார் வசத்தில் ஒப்பித்து விட்டு எங்களிடத்தில் விடை பெற்றுக் கொண்டு யுத்தத்துக்குப் போனார். அவர் போனபிற்பாடு சில காலம் வரையில் அவரிடத்திலிருந்து எங்களுக்குக் கடிதங்கள் வந்து, பிற்பாடு என்ன காரணத்தைப் பற்றியோ கடிதம் வராமல் நின்றுபோய் விட்டது. எனக்குப் பிள்ளை மட்டும் இல்லாமலிருக்குமானால் என் பர்த்தா பிரிந்த உடனே என் பிராணனும் பிரிந்து போயிருக்கும். புத்திர வாஞ்சையே என் பிராணன் போகாதபடி தடுத்துவிட்டது. என் பிள்ளை என் பர்த்தாவினுடைய சாயலாக இருந்தபடியால், பிள்ளை முகத்தைப் பார்த்துப் பார்த்து புருஷனைப் பிரிந்த சோகத்தை ஒருவாறு மாற்றினேன். என் பிள்ளையை அவர் பிள்ளையைப் போல அதிக பட்சமாக வளர்த்து இளமைப் பருவத்திலே வித்தியாப்பியாசஞ் செய்வித்தார். அந்தப் பிள்ளைக்குப் பத்து வயது நடக்கும்போது அநேக ஆபரணங்களைத் தரித்துக் கொண்டு ஒரு நாள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளை, வீட்டுக்குத் திரும்பி வரவில்லை. உடனே என் தகப்பனாரும் வேலைக்காரர்கள் முதலானவர்களும் வீதி வீதியாக ஓடிப் பிள்ளையைத் தேடினார்கள். பிள்ளையும் அகப்பட வில்லை. பிள்ளையைத் தேடிப் போன என் தகப்பனாரும் வரவில்லை. வேலைக்காரர்கள் பலநாள் வரையில் பல இடங்களில் தேடிப் பார்த்தும் என் பிள்ளையும் தகப்பனாரும் அகப்படவில்லை. நான் பிள்ளையையும் இழந்து பிதாவையும் இழந்து தாமரை இலைத் தண்-