பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

பிரதாப முதலியார்‌ சரித்திரம்‌


17-ஆம் அதிகாரம்
போர் வீரர்களின் வரவு—குற்ற விசாரணை
ஆண்டிச்சியம்மாள் ஆர்வலனைக் காணுதல்

ஞானாம்பாள் தப்பி வந்த சமாச்சாரம் என்னுடைய தாய்தந்தையார் கேள்விப்பட்டு, அவளைப் பார்க்கும் பொருட்டு மறு நாள் உதய நேரத்துக்குப் பனம்பள்ளிக் கிராமத்துக்கு வந்தார்கள். அவர்களைக் கண்ட உடனே சம்பந்தி முதலியார் சந்தோஷ சித்தராயச் சொல்லுகிறார்: “உங்களுடைய புத்திர சிரோமணியால் எங்களுடைய அருமைக் குமாரத்தியை நாங்கள் மறுபடியும் கண்டோம். அவளை இன்னும் இரண்டு நாள் வரைக்கும் காணாமலிருப்போமானால், எங்களுடைய உயிரைக் காணமாட்டோம். நாங்கள் குடும்பத்துடன் மாண்டுபோயிருப்போம். உங்கள் குமாரனே எங்களுக்குக் குடும்பப் பிரதிஷ்டை செய்வித்தான். ஞானாம்பாளுடைய சரீரம் அவனால் ரக்ஷிக்கப்பட்டபடியால் அந்தச் சரீரத்தை அவனுக்கே தத்தம் செய்ய யோசித்திருக்கிறேன். இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். “உங்களுடைய இஷ்டப்படி நடக்கக் காத்திருக்கிறோம்” என்று என்னுடைய தாய் தந்தையர்கள் சொன்னார்கள். கலியாணத்தை இனித் தாமதப்படுத்தக் கூடாதென்றும், சீக்கிரத்தில் நிறைவேற்ற வேண்டுமென்றும் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, வீட்டுக்கு வெளியில் யுத்தம் நடப்பதுபோல் பெரிய இரைச்சலும் சப்தமுங் கேட்டு நாங்கள் உடனே வெளியே ஓடிப் பார்த்தோம். அனேக சிப்பாய்களும் சேவகர்களும் உருவின கத்தி முதலிய ஆயுதங்களுடனே வந்து எங்கள் வீட்டை வளைத்துக் கொண்டார்கள். அவர்களுடன் கூட ஒரு பெரிய குதிரையின் மேல் ஏறிக் கொண்டு வந்த சுதேசியான ஒரு