பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

பிரதாப முதலியார் சரித்திரம்

கொண்டோம். கனக சபைக்கு எப்போது விவாகமென்றும் எங்கே பெண் பார்த்திருக்கிறீர்களென்றும் தேவராஜப் பிள்ளையை என் தகப்பனார் கேட்க, அவர் சொல்லுகிறார்:—

”என் தங்கை பெண்ணைக் கனகசபைக்கு மணஞ்செய்கிறதென்று நிச்சயித்திருக்கிறோம். அந்தப் பெண் பெயர் குணரத்தினம். அந்தப் பெண்ணுடைய சரித்திரம் கனகசபை சரித்திரம் போல் ஆசாரியப்படத்தக்கதா யிருக்கின்றது. என் தங்கை புருஷன் மாணிக்கம்பிள்ளை பெரிய தனவான். எங்கள் ஊருக்கு நாற்பதுகாத வழி தூரத்திலிருக்கிற சிங்கனூர் அவருடைய வாசஸ்தலம். குணரத்தினத்தைத் தவிர வேறே பிள்ளை இல்லாதபடியால் அந்தப் பெண்ணைக் கண்ணுக்குக் கண்ணாகவும் உயிருக்கு உயிராகவும் வளர்த்தார்கள். அந்தப் பெண் சிறு குழந்தையா யிருக்கும்போது ஒரு அமாவாசை இராத்திரியில் அனேக ரத்னாபரணங்களுடன் தொட்டியிலே படுத்துத் தூங்கிற்று. ஒரு திருடன் நடுச்சாமத்தில் எவ்வகையாகவோ உள்ளே நுழைந்து, அந்தப் பெண் தரித்திருந்த நகைகளைக் கழற்றப் பிரயாசைப் பட்டுங் கூடாமலிருந்ததால், வெளியில் கொண்டுபோய் நகைகளைப் பறித்துக் கொள்ளலாமென்று நினைத்து அந்தப் பிள்ளையை மிருதுவாய்த் தூக்கிக்கொண்டு தெருக் கதவைத் திறந்து வெளியே ஓட ஆரம்பித்தான். அந்த அரவங் கேட்டு என் மைத்துனரும் மற்றவர்களும் விழித்துக் கொண்டு தொட்டிலில் பிள்ளயைக் காணாமையால் உடனே திருடனைத் தொடர்ந்து கொண்டு ஓடினார்கள். அந்தத் திருடன் வெகு தூரம் முன்னும், இவர்கள் பின்னுமாக ஓடும்போது அந்தத் திருடன் பயந்துகொண்டு சமீபத்திலிருந்த ஐயனார் கோவிலுக்குள்ளே நுழைந்து அந்தப் பிள்ளையை விக்கிரகத்தின் பாதத்தில் வைத்துவிட்டு அந்த விக்கிரகத்தின் பின்னாலே மறைந்து கொண்டான். என் மைத்துனர் முதலானவர்கள் நக்ஷத்திர வெளிச்சத்தில் ஒருவன் கோயிலுக்குள் நுழைந்ததைப் பார்த்த படி-