பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெட்ட பெண்கள்‌

127

தும் புருஷர்க ளெல்லாரும் துஷ்டர்க ளென்று தூஷிக்கிறதும், எனக்கு வழக்கமா யிருந்தது. ஒரு நாள் ஞானாம்பாள் என்னை நோக்கி ““ஸ்திரீகளில் நல்லவர்களும் இருக்கிறார்கள்; கெட்டவர்களும் இருக்கிறார்கள். அப்படியே, புருஷர்களிலும் சிஷ்டர்களும் துஷ்டர்களு மிருக்கிறார்கள்” என்றாள்.

மில்ட்டன் (Milton) என்னும் இங்கிலீஷ் மகாவித்வான், அந்தகனான பிற்பாடு விவாகம் செய்த பெண்சாதி, எவ்வளவோ கொடுமை யுள்ளவ ளென்று அந்த வித்வானே முறையிடுகிறார். அவளை ஒரு பெரிய பிரபு ரோஜாப் புஷ்ப மென்று வர்ணித்த போது அந்த மகாவித்வான் அவரை நோக்கி ‘“நான் குருட னானதால் அவள் அழகினுடைய சமாசாரம் எனக்குத் தெரியாது; ஆனால் என் மேலே படுகிற தெல்லாம் முட்கள்தான்’” என்றார்.

“சோக்கிராட்டிஸ் (Socrates) என்னும் ஞான சாஸ்திரிக்கு வாய்த்த பெண்சாதி, எவ்வளவு பொல்லாதவளென்று சகலருக்கும் தெரிந்த காரியமே. அவள் செய்த கொடுமைகளை யெல்லாம் அவர் எவ்வளவோ பொறுமையுடன் சகித்தார். ஒரு நாள் அவள் சொன்ன தூஷணங்களைச் சகிக்கமாட்டாமல் அவர் வெளியே போய், வாசற்படிக்கு முன்பாக உட்கார்ந்தார். அவள், கோபாவேசத்துடன், மேல்மெத்தை மேல் ஓடி, அங்கே விருந்த அசுத்த நீர் நிறைந்த பானையை எடுத்து அவர் தலைமேல் கவிழ்த்தாள். அவர் சிரித்துக் கொண்டு ““முன்னே இடி இடித்தது. இப்போது மழை பெய்கிறது”” என்று சொல்லிப் பொறுமையாயிருந்தார்.

“ஒரு புருஷன் வடை தின்ன ஆசைகொண்டு உழுந்து வாங்கி, பெண்சாதி யிடத்திலே கொடுத்து வடை சுடும்படி ஆக்ஞாபிக்க, அவள் நூறு வடை சுட்டு, தொண்ணூற்றொன்பது வடைகளையும் அவளே தின்றுவிட்டு, ஒரு வடை மட்டும் புருஷனுக்கு வைத்தாள். அவன் ‘அத்தனை