பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரதாப முதலியார் சரித்திரம்

128

வடைகளையும் “எப்படித் தின்றாய்?”’ என்று கேட்க, அவள் “‘இப்படித் தான் தின்றேன்‘” என்று அந்த ஒரு வடையையும் எடுத்துத் தின்றுவிட்டாள். இவள் எப்படிப்பட்ட அரக்கியாய் இருக்கவேண்டும்?

பின்னும் ஒரு பெண்சாதிக்கும் புருஷனுக்கும் வாக்குவாதமுண்டாகி அவன் பெண்சாதியைப் பழி வாங்குவேனென்று சொல்ல, “அவள் “என்ன பழி வாங்குவாய்?”” என்று கேட்க, “‘கொல்லை யிலிருக்கிற குளத்தில் விழுந்துவிடுவேன்’” என்று புருஷன் சொல்ல, அவள் ’நீ “விழுகிறதை நான் கண்ணாலே பார்க்கவேண்டும் வா”’ என்று திட்டி மடியைப் பிடித்து இழுக்க அவன் குளத்தில் விழுகிறதற்காக ஒரே ஓட்டமாக ஓடினவன் பிற்பாடு பயந்துகொண்டு குளத்து ஓரத்தில் நின்றுவிட்டான். உடனே அவனை அவன் பெண்சாதி வாயில் வந்தபடி தூஷித்து “’வெட்கம் கெட்டவனே! ஏன் குளத்தில் விழவில்லை?’” என்று கேட்க அவன் ’“எனக்கு மனம் துணிய வில்லை. பின்னும், எனக்கு நீச்சுத் தெரியுமானதால் நான் தப்பிவந்தாலும் வந்துவிடுவேன். நான் தப்பிவராதபடி என்னுடைய இரண்டு கைகளையும் நீ பின் கட்டு முறையாய்க் கட்டி விட்டு தூரத்திலிருந்து ஓடிவந்து என்னைக் குளத்திலே தள்ளி விடு’” என்று சொல்லிக் குளத்து ஓரத்தில் நின்றான். அந்தப் பிரகாரம் பெண்சாதி பர்த்தாவினுடய இரு கைகளையும் பின்புறமாய்க் கட்டிவிட்டு அவள் வெகு தூரம் பின்னிட்டுப் போய் அவனைத் தள்ளுவதற்காக அதி வேகமாக ஓடிவந்தாள். அவள் தனக்குச் சமீபத்தில் வரும்போது அவன் திடீரென்று அப்பால் விலகிவிட்டான். அவள் ஓடிவந்த விசையினால் அவளே ஒர் நிமிஷத்திற் குளத்தில் விழுந்துவிட்டாள். உடனே தன்னைத் தூக்கிவிடும்படி கத்தினாள். ’“நீயே என் கைகளைக் கட்டிவிடாயே! நான் என்ன செய்வேன்?”’ என்று புருஷன் சும்மா இருந்துவிட்டான். அவள் ஸ்வயங்கிருத அபராதத்தால் தண்ணீரில் மூழ்கி இறந்து போனாள்” என்றாள்.