பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பரத்தையின்‌ சூழ்ச்சி

133

மட்டும் பிரயாசைப்பட்டும் அநுகூல சித்தியாகவில்லை. பிற்பாடு அந்த உத்தமி கடவுளே கதியென்று அவரிடத்திலே சகல நம்பிக்கையும் வைத்து புருஷன் வரும்போது அவனுடைய பணிவிடைகளில் ஒரு குறைவும் இல்லாமல் சர்வ சாக்கிரதையாய் நடந்து வந்தாள்.

““புருஷனுக்கும் பெண்சாதிக்கும் ஒரு சம்பந்தமுமில்லாமல் செய்துவிட வேண்டுமென்று அவனுடைய வைப்பாட்டி கருதி, அவள் மேலே இல்லாத தோஷங்களையெல்லாம் உண்டுபண்ணிச் சொன்னதுந் தவிர அந்தப் பதிவிரதையினுடைய கற்புக்கும் பழுது சொல்ல ஆரம்பித்தாள். அதை அவன் நம்பவில்லையென்று கண்டு அவனுக்கு நம்பிக்கை உண்டாகும்படியாக அந்தச் சோர ஸ்திரீ அபாண்டமான கற்பனை செய்யத் தொடுத்தாள். எப்படியென்றால் அந்த உத்தமி கள்ளப் புருஷர்களுக்குக் கடிதம் எழுதி அவர்கள் அதற்குப் பதில் எழுதினதுபோல அந்த சோர ஸ்திரீ இரண்டு கடிதங்களை உற்பத்தி செய்து அதை அந்த உத்தமியினுடைய வேலைக்காரி கையிற் கொடுத்து அவளுடைய மேசைக்குள்ளாக வைத்துவிடும்படி ஜாக்கிரதை செய்தாள். அந்த வேலைக்காரி தன்னுடைய எஜமானிக்குத் துரோகஞ் செய்யமாட்டேனென்று முந்தி ஆக்ஷேபித்தாலும் பின்பு பணப்பிசாசின் ஏவுதலால் அந்தக் கடிதங்களைத் தன்னுடைய தலைவியின் பெட்டியில் வைத்துவிட்டாள். இது நடந்த பிற்பாடு அந்தச் சோர ஸ்திரீ அந்த தனவானைப் பார்த்து “உங்களுடைய பெண்சாதி மேலே தோஷஞ் சொன்னால் நீங்கள் நம்புகிறதில்லை. உங்கள் கௌரவத்திற்குக் குறைவு வரக்கூடாதென்று நான் சொல்லுகிறேனே தவிர எனக்கு ஏதாவது லாபமுண்டா? உங்கள் பத்தினியும் அவளுடைய சோர நாயகனும் ஒருவர்க்கொருவர் அடிக்கடி கடிதம் எழுதிக் கொள்வதாகவும் கேள்விப்படுகிறேன். அவளுடைய பெட்டி முதலானவைகளைச் சோதித்தால் கடிதங்கள் அகப்பட்டாலும் அகப்படலாம். நீங்கள் எப்படி-