பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

பிரதாப முதலியார் சரித்திரம்

யாவது உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள்” என்றாள். உடனே அந்தத் தனவான் “நீ யார் மூலமாய்க் கேள்விப்பட்டாய்?” என, அந்தத் துஷ்டை “நான் அவர்களை இப்போது காட்டிக் கொடுக்க மாட்டேன். நீங்கள் உங்கள் வீட்டைப் பரிசோதித்துப் பாருங்கள்” என்றாள்.

“அவன் இதையும் நம்பாமல் போஜனத்துக்காகத் தன் வீட்டுக்குப் போனான். அவன் போஜனஞ் செய்தபிற்பாடு அவனுடைய பத்தினி வந்து உள்ளூரிலிருக்கிற தன்னுடைய தகப்பனார் வியாதியாயிருப்பதாகத் தான் கேள்விப்பட்டதாகவும் அவரைப் போய்ப் பார்த்துக்கொண்டு உடனே திரும்பி வருவதாகவும் சொல்லி உத்தரவு கேட்டாள். அவள் போனபிற்பாடு அவளுடைய பெட்டியைச் சோதிக்கும்படி வைப்பாட்டி சொன்னது ஞாபகத்துக்கு வந்து அவன் உடனே பெட்டியைத் திறந்து பார்வையிட்டான். அதில் அந்த இரண்டு கற்பனைக் கடிதங்களும் அகப்பட்டன. அவைகளை அவன் படித்துப் பார்த்தவுடனே, பெண்சாதி மேலே கோபாக்கினி மூண்டுவிட்டது. அவள் அந்தச் சமயத்தில் இருந்திருப்பாளானால் தப்பாமற் பிராணாபாயம் சம்பவித்திருக்கும். அந்தக் கடிதங்களில் ஒன்றில் அன்றைய தினம் இராத்திரி பத்து மணிக்குக் கள்ளப் புருஷன் தன் பெண்சாதியிடத்தில் வருவதாக எழுதியிருந்தபடியால் அவனும் வந்த பிற்பாடு இருவரையும் ஒரே முகூர்த்தத்திலே கொன்றுவிடுகிறதென்று நிர்ணயித்து, தன்னுடைய கோபத்தையும் அடக்கிக் கொண்டிருந்தான் தகப்பனாரைப் பார்க்கப் போயிருந்த அவனுடைய பாரி அஸ்தமிக்கிற சமயத்தில் வீட்டுக்குத் திரும்பி வந்தாள். அவளை அவன் வாயில் வந்தபடி நிஷ்காரணமாய்த் தூஷித்துக் கொண்டிருந்தான். சில நாளாய்த் தூஷிப்பது அவனுக்கு வழக்கமாயிருந்தபடியால் அவள் எதிர்வார்த்தை ஒன்றுஞ் சொல்லாமல் மௌனமாயிருந்தாள். அவன் இராப் போசனஞ் செய்த பிற்பாடு, வழக்கப்படி,