பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

பிரதாப முதலியார் சரித்திரம்

அவ்விடத்திலே சில நாள் வசித்தான். அவனுக்கு மிருகங்களின் பாஷை நன்றாகத் தெரியும். ஆனால் அதை வெளிப்படுத்தினால் அவன் இறந்துபோவானென்கிற ஒரு சந்தேகமுமிருந்தது. ஒரு நாள் ஒரு காளை மாடும் கழுதையும் கட்டபட்டிருந்த கொட்டத்துக்குச் சமீபத்தில் அந்த வியாபாரி உட்கார்ந்திருந்தான். அப்போது அந்தக் காளைமாடு கழுதையைப் பார்த்து யுஎன்னைப் பகல் முழுதும் ஏரிலே கட்டிக் கொல்லுகிறார்கள்; நீ அதிர்ஷ்டசாலியானதால் சௌக்கியத்தை அனுபவிக்கிறாய்ரு என்று முறையிட்டது. யுஇனி மேல் என்னை ஏரிலே கட்டவந்தால் கழுத்தைக் கொடாமல் முட்டித் தள்ளுரு என்று மாட்டுக்குக் கழுதை துர்ப்போதனை செய்தது. அந்தப் படி மறுநாட் காலையில் மாடு வசப்படாமல் முரட்டுத்தனஞ் செய்தபடியால் அதைப் பற்றி வேலைக்காரன் எசமானுக்குத் தெரிவித்தான்.

“முந்தின நாள் கழுதை செய்த உபதேசம் எசமானுக்குத் தெரியுமானதால் மாட்டுக்குப் பதிலாகக் கழுதையை ஏரிலே கட்டி உழும்படி ஆக்ஞாபித்தான். அந்தப் படி கழுதை அன்றையத் தினம் ஏரிலே கட்டப்பட்டு அது பட்டபாடு சாமானியம் அல்ல. கழுதை பாதிப் பிராணனுடன் அஸ்தமனத்துக்குக் கொட்டத்துக்கு வந்தவுடன் மாட்டைப் பார்த்துப் பெருமூச்சு விட்டு யுநாளைத் தினம் நீ என்ன செய்யப்போகிறாய்?ரு என்று கேட்க யுஇன்றைத் தினஞ் செய்ததுபோலவே நாளைத் தினமும் செய்யப்போகிறேன்ரு என்று மாடு சொல்ல உடனே கழுதை யுஅப்படிச் செய்யாதே; ஏனென்றால் எசமான் நீ வியாதியாயிருப்பதாக உன்னைக் கொன்றுவிடும்படி ஆளுக்கு உத்தரவு கொடுத்ததை நான் காதினாலே கேட்டேன். நாளைத் தினம் உன்னை நீ ஏரிலே கட்டும்போது நீ முரட்டுத்தனஞ் செய்யாமலிருந்தால் பிழைத்தாய்; அப்படியில்லாமல் சண்டித்தனஞ் செய்வாயானால் உன் பிராணம் உனக்குச் சொந்தமல்ல.ரு என்றது.