பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

பிரதாப முதலியார் சரித்திரம்

கமே யில்லை. என்னுடைய தாரங்களில் ஒருத்தியை ஒரு பக்கத்திலும் மற்றொருத்தியை மற்றொரு பக்கத்திலும் படுக்கவைத்து நான் நடுவே படுத்துக்கொள்கிறது வழக்கம். அவள் பக்கத்தில் நான் திரும்பினால் இவள் திட்டுகிறாள்; இவள் பக்கத்திலே திரும்பினால் அவள் திட்டுகிறாள்; ஒருத்தியையும் பாராமல் மல்லாக்காய்ப் படுத்துக்கொண்டால் இருவரும் திட்டுகிறார்கள். பின்னுங் கூடி, என் தலையை மொட்டையாக்கி விட்டார்கள். எப்படியென்றால் அவளுடைய பக்கத்தில் திரும்பியிருக்கும்போது இவளும், இவள் பக்கத்தில் திரும்பியிருக்கும்போது அவளும் கோபத்தினால் தனித்தனியே என் தலைமயிரைக் கத்தரித்து முண்டிதம் ஆக்கிவிட்டார்கள், என்று சொல்லித் தன்னுடைய மொட்டைத் தலையைச் சாக்ஷி காட்டினான்”” என்றேன். இவ்வகையாக வினோத சல்லாபத்தில் நானும் ஞானாம்பாளும் அந்த இரவைப் போக்கினோம்.




24-ஆம் அதிகாரம்
சோர பயம், தளவருக்கும் உளவருக்கும்
நடந்த சண்டை—புண்ணிய கோடி செட்டி
சரித்திரம்

அத்தியாயம் - 24 மறு நாள் விடியுமுன் எழுந்து, மறுபடியும் பிரயாணம் ஆரம்பித்தோம். பகல் முழுதும் யாத்திரை செய்கிறதும் இரவில் எந்த ஊர் நேருகிறதோ அந்த ஊரில் தங்குகிறதும் இவ்வகையாக நாங்கள் பயணஞ் செய்துகொண்டு போகும்போது ஒரு நாள் அஸ்தமிக்கிற வரை-