பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கள்வருக்கும்‌ உளவருக்கும்‌ சண்டை

149

யில், நாங்கள் தங்கும்படியாகச் சத்திரமாவது ஊராவது தென்படவில்லை. அன்றையத் தினம் அமாவாசை இருட்டானதால் எங்கே தங்கலாமென்று யோசித்துக்கொண்டு போகையில் வழிக்குக் கொஞ்ச தூரத்தில் ஒரு சாவடி காணப்பட்டது. அந்தச் சாவடியில் தங்க லாமா வென்று அவ்விடத்தில் நின்று கொண் டிருந்த ஆட்களை விசாரித்தோம். அவர்கள் அது தகுதியான இடமென்று சொன்னதினால் நாங்கள் பண்டியை நிறுத்தி, அந்தச் சாவடியில் தங்கி, நானும் ஞானாம்பாளும் வழியில் வந்த களைப்பினால் முன் னேரத்தில் படுத்துத் தூங்கினோம். வேலைக்காரர்கள் சுயம்பாகம் செய்து, எங்களை எழுப்பி, அன்னம் படைத்தார்கள்.

போஜனம் முடிந்த வுடனே, எங்கள் வேலைக்காரர்களில் ஒருவன் எங்களைப் பார்த்து ““ஐயா! நான் ஜலம் கொண்டுவரக் குளத்துக்குப் போனபோது, ஒரு மனுஷன் என்னைக் கண்டு இந்த இடம் கள்ளர்கள் வசிக்கிற இடமென்றும், இந்தச் சாவடியில் அநேகம் விசை கொள்ளையும் கொலையும் நடந்திருப்பதாகவும், சொன்னான். அந்தச் சாவடி தங்குவதற்குத் தகுந்த இடமென்று சில ஆட்கள் சொன்னதை நம்பி, நாங்கள் தங்கினோ மென்று நான் தெரிவித்தேன். அப்படி யாராவது உங்களுக்குத் தெரிவித்திருந்தால், அவர்கள் திருடர்களாகவே இருப்பார்கள். நீங்கள் சர்வ ஜாக்கிரதையா யிருக்க வேண்டும் என்று, அந்த மனுஷன் எச்சரிக்கை செய்து போய் விட்டான்”” என்றான். இதைக் கேட்ட வுடனே எனக்கு அடி வயிற்றில் இடி விழுந்தது போலிருந்தது. ஞானாம்பாளில்லாமலிருந்தால், நான் பயப்படமாட்டேன். அவள் கூட இருப்பதால், என்ன அவமானம் நேரிடுவோமென்கிற பயம் அதிகரித்து. அவளை எங்கே யாவது ஒளித்து வைக்கலா மென்று பார்த்தால், எங்கும் வெட்டார வெளியா யிருந்ததால், தகுந்த இடம் அகப்பட வில்லை. அவள் பயந்து நடுங்குவதைக் கண்டு ”“ஞானாம்பாள்! நீ ஒன்றுக்கும் பயப்படாதே. நானும் வேலைக்காரர்களும்