பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

பிரதாப முதலியார் சரித்திரம்

பண்டிக்காரக்ளும் உட்பட ஆறு பேர்கள் இருக்கிறோம். நமக்கு வேண்டிய ஆயுதங்களும் இருக்கின்றன. திருடர்கள் எத்தனை பேர்கள் வந்தாலும் ஒரு கை பார்க்கிறோம்” என்று ஞானாம்பாளுக்குப் பயம் நீங்கும்படியான வார்த்தைகளைச் சொன்னேன். அவள் என்னைப் பார்த்து “நான் பயப்படுகிறதெல்லாங் கூடி திருடர்கள் வந்தால் நீங்கள் சும்மா இருக்க மாட்டீர்கள். அவர்களை எதிர்த்துச் சண்டை செய்வீர்கள். அப்போது என்ன அபாயம் நேரிடுமோ வென்று தான் அஞ்சுகிறேன். என் பயத்தை உங்களுடைய வார்த்தை ஸ்திரப்படுத்துகிறது. நம்முடைய பலத்தையும் எதிரியினுடைய பலத்தையும் இடம் காலம் முதலிய பலாபலங்களையும் யோசிக்காமல் யுத்தத்துக்குப் புறப்படுவது உசிதமல்ல. சொத்துக்களைத் திருடுவதற்காகவே திருடர்கள் வருகிறார்கள். அவர்களுடைய எண்ணத்துக்கு யாதொரு விக்கினம் நேரிட்டால் அவர்கள் கொலைபாதகத்துக்கு அஞ்சுவார்களா? அடியாளுக்குத் தோன்றுகிறதெல்லாம் கூடி கள்ளர்களுடைய கூட்டம் அதிகமாயிருக்கிற பக்ஷத்தில் அவர்களை எதிர்க்காமல் நம்முடைய கையில் உள்ள சொத்துக்களை அவர்களிடத்தில் கொடுத்து மரியாதையையும் பிராணனையும் காப்பாற்றிக் கொள்வதே விவேகமென்று தோன்றுகிறது. பின்னும் இந்தச் சமயத்தில் கடவுளைத் தவிர வேறு துணை இல்லாதபடியால் அவரை நம்பினால் கைவிடமாட்டார்”” என்றாள்.

இவ்வாறு நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது மேற்குத் திசையில் வெடி சப்தங் கேட்டு, நான் சாவடித் திண்ணையை விட்டுக் கீழே குதித்து அந்தத் திசையைப் பார்த்தேன். சிறிது தூரத்தில் வெளிச்சங்களுடனே திருடர்கள் பெருங் கூட்டமாய் வருகிறதைக் கண்டு, திண்ணைமே லேறி நாங்கள் வைத்திருந்த தீபம் வெளியிலே தெரியாதபடி மறைவாக வைத்துவிட்டு சுவாமி மேலே சகல பாரத்தையும் போட்டுவிட்டு, திருடர்கள் வந்தவுடனே அவர்களிடத்தில் கொடுக்க வேண்டிய-