பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புண்ணியகோடி செட்டி வரலாறு

153

தந்தைமார்களால் சம்ரக்ஷிக்கப்பட்டு வந்தோம். எனக்குப் பன்னிரண்டு வயது நடக்கும்போது ஒரு நாள் அந்த வீட்டுக் கொல்லையில் மரம் வைக்கவேண்டியதற்காக ஒரு சிறிய மண்வெட்டியால் பள்ளம் பறித்துக் கொண்டிருந்தோம். அந்தப் பள்ளத்தில் மண்வெட்டுப்பட்டு, வெண்கல ஓசை போல் கணீரென்று சப்தங் கேட்டது. அது என்னவென்று மறுபடியும் தோண்டிப் பார்க்கத் தோலினால் மூடப்பட்ட ஒரு வெண்கலத் தோண்டி அகப்பட்டது. அதை என் தாயார் வீட்டுக்குள்ளே கொண்டுபோய்த் தெருக் கதவை மூடிவிட்டு வெண்கலத் தோண்டியைத் திறந்து பார்க்க, அறுநூறு பூவராகனும் அநேக ரத்னாபரணங்களும் அடக்கஞ் செய்யப் பட்டிருந்தன. அவ்வளவு பொருளை நாங்கள் ஒருநாளும் பாராதவர்களான படியால் அந்த சங்கதியை வெளிப்படுத்த வேண்டாமென்று என் தாயார் எனக்குச் சொன்னாள். நான் உடனே என் தாயாரைப் பார்த்து “இந்த வீடுங் கொல்லையும் நம்மை இரக்ஷிக்கிற கனகாசல முதலியாருக்குச் சொந்தமானதால் அதில் அகப்பட்ட நிதேக்ஷமும் அவருக்குத் தானே சொந்தம்? இந்தச் சங்கதியை அவருக்குச் சொல்லாமலிருப்பது கிரமமா/” என்று சொல்லிக் கொண்டு கதவைத் திறந்தேன். உடனே என் தாயார் நான் வெளியே போகாதபடி என்னைக் கட்டிப் பிடித்தாள்; நான் திமிறிக் கொண்டு உங்கள் வீட்டுக்குப் போவதற்காக வெளியே ஓடினேன். என் தாயாரும் கதவைப் பூட்டிவிட்டு வெகுதூரம் வரையில் என்னைத் துரத்திக் கொண்டு ஓடிவந்தாள். நான் அகப்படாமல் ஓடி வந்து உங்கள் வீட்டுக்குள்ளே நுழைந்து விட்டேன். என் தாயார் இனி மேல் காரியமில்லை யென்று வீட்டுக்குத் திரும்பிப் போய்விட்டாள். நான் ஓடி வந்த ஓட்டத்தினால் மேல் மூச்சு கீழ்மூச்சு விட்டுக்கொண்டு உள்ளே வந்து நுழைந்ததைத் தங்கள் தாய் தந்தையார் கண்டு “‘ஏன் அப்பா! இப்படி ஓடி வந்தாய்?’ என்று கேட்டார்கள். நான் ஓடி வந்த சிரமம் நீங்கின-