பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

பிரதாப முதலியார் சரித்திரம்

யானால் நீங்கள் சமயத்திற் செய்த பேருதவிக்கு யாரை ஒப்பிடுவேன்?” என்று பலவகையாக என்னுடைய நன்றியறிதலை வெளிப்படுத்தினேன். அவர் பொழுது விடிந்தவுடனே தம்முடைய ஊருக்கு வரவேண்டுமென்று பிரார்த்தித்தார். நாங்கள் திரும்பி வரும்போது அகத்தியம் வருவதாகச் சொல்லி விடைபெற்றுக்கொண்டு மறுபடியும் பிரயாணம் ஆரம்பித்தோம்.




25-ஆம் அதிகாரம்
புலி யென்னுங் கிலி—அழையா விருந்து—
பிரயாண முடிவு


ஒரு நாள் மத்தியானத்தில் இரண்டு பக்கமும் மலைகள் அடர்ந்த கானகத்தின் வழியாக நாங்கள் யாத்திரை செய்து கொண்டிருக்கையில், திடீரென்று வானம் இருண்டு, பெருங் காற்றுடனே மழையும் துவங்கிற்று. நாங்கள் இருந்த வண்டியில், நாலு பக்கமும் தூவானம் அடித்து, நாங்கள் நனையும் படியான ஸ்திதியில் இருந்தபடியால், மழை விடுகிற வரையில் மலைக் குகைக் குள்ளே, இருக்கலா மென்று நினைத்து, வண்டியினின்று கீழே இறங்கி, நானும் ஞானாம்பாளும் வேலைக்காரர்களும் அவர்களுடைய பெண்சாதிகளும் மலை அடிவாரத்துக்குப் போனோம். வண்டிக்காரர்கள் வண்டிகளுக்குக் காவலாக இருந்தார்கள். நாங்கள் மலை அடிவாரத்தில் இருள் அடைந்த ஒரு கெபியைக் கண்டு அதற்,குள்ளே நுழைந்து, வாசற்படி யோரத்தில் உட்கார்ந்தோம். மழை