பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

பிரதாப முதலியார் சரித்திரம்

தற் காகப் புறப்பட்டோம்; மழையினால் எங்களுடைய வேஷம் கலைந்து போ மென்று நினைத்து அந்தக் குகைக்குள்ளாக உங்களுக்கு முன்பாக வந்து உட்கார்ந் திருந்தோம். இதுதான் நடந்த வாஸ்தவம்”” என்றார்கள். அவர்கள் புலி அல்ல வென்றும் வேஷக்காரர்க ளென்றும், எங்களுக்குப் பிரத்தியட்சமாய்த் தெரிந்தவுடனே எங்களுடைய பயம் நீங்கி விட்டது. கீழே விழுந்து கிடந்த அந்த வேலைக்காரிகளுடைய நடுக்கம் தீரவே யில்லை. அவர்கள் எழுந்திருக்கும் படியாக நாங்கள் பட்ட பாடு கொஞ்சமல்ல. அவர்களுடைய புருஷர்கள் போன வழி தெரியாமையால் அவர்களை நாலு பக்கமும் தேட ஆரம்பித்தோம். சற்று நேரத்துக்குப் பின்பு சாமான்களை விலக்கிப் பார்த்தோம். அந்த வேலைக்காரர்கள் சாமான் வண்டிக்குள் நுழைந்து, சாமான்களை வாரி மேலே போட்டு மறைத்துக்கொண்டு படுத் திருந்தார்கள். அவர்களை எழுப்பி வெளியே விட்டு, “‘ஆபத்து வரும்போது நாங்கள் முன்னின்று தலை கொடுப்போம் என்று சொல்லி வந்த நீங்கள் இப்படிச் செய்யலாமா?”’ என்று கேட்டேன். அவர்கள் என்னைப் பார்த்து “‘சுவாமி! எங்கள் மேலே தோஷமில்லை; ஆபத்து இல்லாத காலத்தில் நாங்கள் பூரண தைரியசாலிகளா யிருக்கிறோம்; ஆபத்தைக் கண்டவுடனே எங்களுடைய கால்கள் நிலை கொள்ளாமல் எங்களையும் இழுத்துக்கொண்டு ஓடுகின்றன; நாங்கள் என்ன செய்வோம்?‘” என்றார்கள். இப்படிப்பட்ட சுத்த வீரர்களைக் கோபிப்பதில் பிரயோசனம் என்ன? அவர்களுடைய பெண்சாதிகளை ஆபத்து வேளையில் கைவிட்டு ஓடினதற்காக அவர்களே புருஷர்களைக் கோபிப்பார்களென்று நினத்து நான் சும்மா இருந்துவிட்டேன். அந்த மூடப் பெண்சாதிகள் புருஷர்களைக் கோபிப்பதற்குப் பதிலாய் அவர்களைப் பார்த்து ““நீங்கள் ஓடும்போது உங்கள் பாதங்களில் கல்லும் முள்ளும் தைத்திருக்குமே; சாமான்களைத் தூக்கி மேலே போட்டுக் கொண்ட போது