பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxi

பினார். அது சென்று சேர்ந்தபோது, காலஞ்சென்ற நீதிபதியின் பெட்டியில் இருந்த ஆவணங்கள் மாநில நீதி மன்றத்திற்கு அந்நீதிபதியின் உறவினரால் அனுப்பப்பட்டு வந்து சேர்ந்து, வேதநாயகரின் கூற்றுக்குச்சான்று பகர்ந்தன. மாநில நீதி மன்றத்தார் வேதநாயகர் குற்றமற்றவர் எனக் கண்டு, அவரை மீண்டும் வேலைக்கு அமர்த்திக்கொள்ளுமாறு மாவட்ட நீதிபதிக்கு ஆணை அனுப்பினர்.

அப்போது நீதிபதியாயிருந்தவர் மேஸ்தர் கவிண்டன் என்பவர். அவர் பண்பாட்டில் கிரீன்வேயைவிடக் கீழானவர். ஆகவே, அரசு ஆணையை மதித்து வேதநாயகரை வேலைக்கு அமர்த்திக் கொள்ளாமல், அவர் நோயுற்றவர் என்றும், மொழிபெயர்ப்பு வேலைகளைத் தாம் செய்ய இயலாமல் மற்றொருவரின் துணையுடனே செய்தவர் என்றும் காரணம் காட்டி மேலதிகாரிகளுக்குக் கடிதம் எழுதினார். அவரது முடிவை ஏற்றுக்கொள்ளாத மேலதிகாரிகள், அவருக்கு ஓய்வு கொடுத்து அவரை இலண்டனுக்கு அனுப்பிவிட்டு, மேஸ்தர் ஆரிஸ் என்ற நல்லாரை நீதிபதியாக நியமித்தனர். ஆரிஸ் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் வேதநாயகரை அழைத்து வேலையில் அமர்த்திக் கொண்டார்.

மாவட்ட நீதிபதி :

சில ஆண்டுகட்குப்பின், 1856இல் மாவட்ட நீதிபதி (Dt. Munsiff) வேலைக்கு மனுக்கள் கோரப்பட்டன. நம் வேதநாயகர் மனு செய்தார். மற்றும் அறுபதுக்கு மேற்பட்டோரும் மனுச் செய்தனர். மனுக்களை ஆய்ந்த அரசினர் மூவரை மட்டுமே தேர்ந்தெடுத்தனர். அந்த மூவரில் ஒருவர் நம் வேதநயாகர் என்பதை விளம்பத் தேவையில்லை. மற்ற இருவர்: சென்னைள உயர்நீதி மன்ற நீதிபதியாக இருந்த முத்துசாமி ஐயரும், திருவாங்கூர் திவானாக இருந்த ரகுநாதராவும் ஆவர். நம் வேதநாயகர் முதலில் 1857இல் தரங்கம்பாடியில் மாவட்ட நீதிபதியாகப் பொறுப்பேற்றார். பின்னர், 1859இல் சீர்காழிக்கு மாற்றப்பட்டார். ஓராண்-

2