பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

பிரதாப முதலியார் சரித்திரம்

தகப்பனுக்குச் சமானமான கவர்னர் அவர்களிடத்திற் சென்று நம்முடைய குறையைச் சொல்லுவதினால் நமக்கு என்ன அவமானம்? நம்முடைய பிரயத்தனத்தால் அதை விடப் பெரிய பாக்கியமும் கீர்த்தியும் வேறென்ன இருக்கிறது? ரோம் (Rome) பட்டணத்தைச் சத்துருக்கள் வளைத்துக் கொண்டபோது அந்தப் பட்டணத்து ஸ்திரீகளுடைய பிரயத்தனத்தால் அவர்களுடைய புருஷர்கள் பிழைத்தார்களே! அப்படிப்போல் நாமும் முயற்சி செய்வோம்! புறப்படுங்கள்!” புறப்படுங்கள்!” என்றார்கள். இதைக் கேட்டவுடனே எல்லாருக்கும் தைரியம் உண்டாகி என் தாயாரைப் புகழ்ந்து கொண்டாடினார்கள்.

ஒரு ஸ்திரீ மட்டும் என் தாயாருடைய அபிப்பிராயத்தை அங்கீகரிக்காமல் குதர்க்கம் பேசினாள். அவள் சொன்னது என்ன வென்றால், ““இந்தச் சீமாட்டி சொல்வது, எலிகள் கூடிப் பூனையைத் தப்புகிறதற்குச் செய்த உபாயம் போ லிருக்கிறது.

ஒரு காலத்தில் எலிகளெல்லாஞ் சேர்ந்து ஆலோசனைச் சபை கூடி, பூனைக்குத் தப்புகிறதற்கு என்ன உபாயம் செய்யலா மென்று, ஆலோசிக்கத் தொடங்கின. பல எலிகள் பல அபிப்பிராயங்களை வெளியிட்டாலும், அந்த அபிப்பிராயங்கள் அயுக்த மென்று தள்ளப்பட்டன. ஒரு சுண்டெலி எழுந்து, வாசக தாட்டியாகவும் அலங்கார நயமாகவும் தன்னுடைய அபிப்பராயத்தை வெளியிட்டது. எப்படி யெனில் ”“காலம் கண்ட பெரியோர்களும் ஞாதாக்களும் நிறைந்த இந்தச் சபையில், சிற்றறிவை யுடைய சிறியேன் வாய் திறக்க அபாத்திரனாயிருந்தாலும், தாங்கள் கிருபை கூர்ந்து, என்னுடைய அபிப்பிராயத்தையும் சிரவணம் செய்யவேண்டும். பூனை நம்மை வருகிற சமயம் தெரியாமையினால், நாம் அதன் வாய்க்கு இரையாகிறோம். பூனையின் கழுத்தில்