பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Xxiii

வருவாரோ?“ என்று ஒரு நாடோடிப் பாடலே தோன்றுமளவுக்கு நீதி அவரது நீதிமன்றத்தில் நிலைத்திருந்தது.

அவர் தீர்காழியில் வேலை பார்த்து வந்தபோது ஒரு வழக்கு அவரது நீதிமன்றத்தில் நெடுநாட்களாக நடைபெற்று வந்தது. வழக்கின் உண்மையை அறிய முடியாமல் அவரும் கவங்கலானார். அந்நிலையில் இறையுதவியை வேண்டத் தவறவில்லையவர். தீர்ப்பு வழங்கவேண்டிய நாளுக்கு முந்தைய நான் மாலையில், அவர் வீட்டிற்கு அவ்வழக்கைத் தொடுத்தவன் வாந்தான். நூறு (வெள்ளி) ரூபாய்கள் கொண்ட பணமுடிப்பு ஒன்றை அவரிடம் கொடுத்து தனக்குச் சார்பாகத் தீர்ப்பு வழங்க வேண்டுமென்று வேண்டினான். வழக்கின் உண்மையை அறிய, இறைவன் தளக்கு உதவிய முறையை எண்ணி வியந்தார் வேதநாயகர். இறைவனுக்கு நன்றி நவின்றார். வாதிக்கு மகிழ்வு தரும் மறுமொழியைச் சொல்லியனுப்பினார். மறுநாள் காலையில் வழக்கு மன்றத்திற்கு வந்திருந்த வாதியின் முகத்தில் காணப்பட்ட மகிழ்ச்சிக்குக் கரையேயில்லை. ஆனால் வேதநாயகர் முந்தையநாள் மாலையில் நூறு வெண்பொற்காசுகள் உண்மையை வெளிப்படுத்திய வகையை விளக்கிக் கூறி வாதிக்கு எதிராகத் தீர்ப்பு கூறியதோடு, அத்தொகையை வழக்குச் செலவுகளுக்காக எதிரிக்கு அளித்தார். தனக்கு என்ன தண்டனை கிடைக்குமோ என்றெண்ணி நடுங்கிய வாதியை எச்சரிக்கை செய்து மன்னித்து அனுப்பினார். இந்நிகழ்ச்சி அவரது புகழை எங்கும் பரப்பியது.

அவர் மாயூரத்தில் நீதிபதியாக இருந்தபோதும், இங்ஙனமே நேர்மையோடு பணியாற்றி வந்தார். இதனால் பிற நீதி மன்றங்களில் நீதி கிடைக்காது என்று அஞ்சிய பலர், தம் வழக்குகளை மாயூரத்திற்கு மாற்றும்படி அரசியலாருக்கு மனு செய்தனர். இவற்றையெல்லாம் ஆராய்ந்த அரசியலார், நம் வேதநாயகரை முதல்தர நீதிபதியாக உயர்த்தி உத்தரவு பிறப்பித்தனர். அவருடன் நீதிபதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற இருவரும் உயர் பதவிகளையே நோக்க-