பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனகசபை திருமணம்‌

211

கொடுத்த புத்தியைக் கொண்டும் ஏதோ சில முயற்சிகள் செய்தோம். உங்கள் பக்ஷத்தில் நியாயம் இல்லாமலும் தெய்வானுக்கிரகம் இல்லாமலும் இருக்கிற பக்ஷத்தில் நமக்கு ஜெயமுண்டாகுமா? ஆகையால் கடவுளே ஸ்தோத்திரத்துக்குப் பாத்திரராயிருக்கிறார். அந்த ஸ்தோத்திரத்தை நான் பெற்றுக்கொண்டால் கடவுளுக்குரிய ஸ்தோத்திரத்தை நான் கவர்ந்து கொண்டது போல் ஆகுமல்லவா? அன்றியும் எனக்குப் பலரும் சொல்லுகிற புகழ்ச்சியானது என்னிடத்தில் ஆணவத்தையும் இறுமாப்பையும் ஆத்ம ஸ்தௌத்தியத்தையும் விளைவிக்குமென்று பயப்படுகிறேன். ஆகையால் எனக்குப் பிதா ஸ்தானமாகிய நீங்கள் கிருபை கூர்ந்து இனி என்னை ஒருவரும் புகழாதபடி செய்ய வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்” என்றார்கள். உடனே தேவராஜப் பிள்ளை என் தாயாரை நோக்கி, “அம்மா! நீங்கள் சொல்லுகிறபடி எல்லாங் கடவுள் செயல் தான். அவர் அசையாமல் அணுவும் அசையாதென்பது நிச்சயமே. ஆனால் கடவுள் அநேக நன்மைகளை மனுஷர்களைக் கொண்டு செய்விக்கிறபடியால் அவர்களுக்கும் நன்றியறிந்த ஸ்தோத்திரம் தங்களுக்கு அப்பிரியமா யிருக்கிற படியால், இனி மேல் எங்களுடைய நன்றியறிதலை வாயினால் வெளிப்படுத்தாமல் மனதுக்குள்ளே வைத்துக் கொள்ளுவோம்” என்றார். அவர் என்ன சொல்லியும் இதர ஜனங்கள் கேளாமல் அநேக நாள் அளவும் அவர் வீட்டுக்கு வருகிறதும் என் தாயாரைப் பரோக்ஷமாயும் அபரோக்ஷமாயும் வாழ்த்துகிறதுமே மணியமா யிருந்தார்கள்.

கனகசபையின் கலியாண விஷயத்தில் நேரிட்ட சகல விக்கினங்களும் நிவாரணம் ஆகிவிட்டதால், அந்தக் கலியாணத்துக்கு வேண்டிய கிருஷிகளெல்லாஞ் செய்து அதுவும் நிறைவேறிற்று. எப்படியெனில் ஊர் முழுதும் மகர தோரணங்கள் கட்டி, வாழை கமுகுகள் நாட்டிப் பந்தல் அலங்கரித்து, மணமகனையும், மணமகளையும் சுகந்த பனி