பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகற்‌ கொள்ளைக்காரர்‌

219

பக்ஷத்தாருக்கும் சிறிது சாதகமும், சிறிது பாதகமும் பண்ணுகிறார்கள். ஒருவனுக்கு முழுதுஞ் சாதகஞ் செய்யக்கூடாத பக்ஷத்தில் அவனிடத்தில் வாங்கின லஞ்சத்தைத் திருப்பிக் கொடாமல் இனிமேல் வரும் வழக்குக்கு அச்சாரமாக வைத்துக் கொள்ளுகிறார்கள். அன்றியும் அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் வருஷத்துக்கு வேண்டிய வஸ்திரங்களை வியாபாரிகள் கொடுக்கிறார்கள்; தானிய தவசங்களைப் பூபாலர்கள் கொடுக்கிறார்கள். அப்படியே உப்பு முதல் கற்பூரம் வரையில் உள்ள பல சரக்குகளையும் பல வியாபாரிகள் இலவசமாகக் கொடுக்கிறார்கள்; நாங்கள் அமாவாசையில் மட்டுந் திருடப்போகிறோம்; அந்த அதிகாரிகள் அகோராத்திரங் கொள்ளையடிக்கிற படியால் அவர்களுடைய கொள்ளைகளுக்கு எங்களுடைய கொள்ளைகள் உறை போடக் காணுமா? நாங்கள் திருடப்போன இடத்தில் அகப்பட்டுக் கொண்டு அந்த அதிகாரிகள் முன்பாக விசாரணைக்கு வரும்போது “குயவனுக்குப் பல நாள் வேலை; தடியடிக்காரனுக்கு ஒரு நிமிஷ வேலை” என்பது போல், நாங்கள் வெகு காலம் பிரயாசைப் பட்டுத் திருடிவைத்த பொருள்களை அவர்கள் ஒரு நிமிஷத்தில் தட்டிப் பறித்துக் கொள்ளுகிறார்கள். திருடர்கள் இடத்திலும் திருடுகிற திருடர்கள் எப்படிப்பட்ட திருடர்களா யிருக்க வேண்டும்? சில புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானஞ் செய்வதினால் தோஷபரிகாரம் ஆவதாகச் சில சமயிகள் சொல்லுகிறார்கள். ஆனால் அதை நாம் திருஷ்டாந்தமாகக் கண்டதில்லை. இந்த அதிகாரிகளுக்கு யார் கொடுக்கிறார்களோ அவர்கள் பெருங் குற்றவாளிகளாயிருந்தாலும் குற்ற நிவர்த்தி அடைகிறார்கள். அவர்களுக்குக் கொடாதவர்கள் மாசற்றவர்களா யிருந்தாலும் குற்றவாளிகள் போலத் தண்டிக்கப் படுகிறார்கள். சில அதிகாரிகள் ஒவ்வொரு வழக்கிலும் லஞ்சம் வாங்கினால் பெயர் கெட்டுப் போகுமென்று பயந்து, தங்கள் கிருகங்களில் நடக்கிற சுபா சுப முதலான விசேஷ தினங்களில்,