பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220

பிரதாப முதலியார் சரித்திரம்

சகல பொருள்களையும் வாங்கிக் கொள்ளுகிறார்கள். அவர்களுடைய கிருகங்களில் அடிக்கடி கலியாணங்களும் ருது சாந்திகளும் உப நயனங்களும் பிதுர் சிரார்த்தங்களும் வருகிற வழக்கம். ஒவ்வொரு அதிகாரியினுடைய குடும்பத்திலும் நூறு பெயர்களிருந்தால் எத்தனை சுபா சுபங்கள் நடக்குமோ அத்தனை சுபா சுபங்கள் ஒவ்வொருத்தருடைய வீட்டிலும் நடக்கின்றன. இதற்குக் காரணம் வருமானமேயன்றி வேறல்ல. அதிகாரியா யிருந்தாலும் யாராயிருந்தாலும், ஒவ்வொருவனுக்கு ஒரு தகப்பன் மட்டும் இருந்து இறந்து போயிருக்க வேண்டும். அப்படியிருக்க ஒவ்வொரு வருஷத்திலுந் தகப்பனுக்குப் பல சிரார்த்தங்கள் வருகிறது எவ்வளவு ஆச்சரியம்?

இரண்டு பூனைகளின் வியாச்சியத்தைக் குரங்கு எப்படி தீர்த்து விட்டதோ அப்படியே சில நியாயாதிபதிகள் தீர்த்துவிடுகிறார்கள். ஒரு பணியாரத்தைப் பிரித்துக் கொள்ளுகிற விஷயத்தில் இரண்டு பூனைகளுக்குள் விவாதம் நேரிட்டு அதைச் சமபாகமாகப் பிரித்துக் கொடுக்கும்படி அந்தப் பூனைகள் ஒரு குரங்கை வேண்டிக்கொண்டன. அந்தக் குரங்கு அந்தப் பணியாரத்தை இரண்டாகப் பிட்டு ஒரு தராசில் வைத்து நிறுத்தது. ஒரு பக்கத்துத் தட்டுக் கனமாயிருந்தபடியால் அதைச் சமன் செய்வதற்காக அந்தத் தட்டில் இருந்த பணியாரத்தில் ஒரு துண்டைக் குரங்கு வாயினால் கவ்வி விழுங்கிவிட்டது. பிறகு மற்றொரு தட்டுக் கீழே இழுத்தபடியால் அதிலும் ஒரு துண்டைக் குரங்கு வாயினாற் கவ்வித் தின்றுவிட்டது. இதைப் பார்த்த உடனே பூனைகளுக்குப் பயம் உண்டாகி “ஐயா! நீங்கள் நிறுத்தது போதும்! நாங்கள் திருப்தி ஆகிவிட்டோம்! எங்களுடைய பாகங்களை எங்களுக்குக் கொடுங்கள்!” என்று பிரார்த்தித்துக் கொண்டன. உடனே குரங்கு பூனைகளைப் பார்த்து ““நீங்கள் திருப்தி அடைந்தாலும் நாம் திருப்தி அடையவில்லை. இப்படிப்பட்ட சிக்கலான வியாச்சியத்தை ஆய்ந்தோய்ந்து பாராமல் அவசரமாகத் தீர்மானிக்கக்கூடாது”” என்று சொல்