பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகற் கொள்ளைக்காரர்

221

லிக் கொண்டு தராசைத் தூக்கி நிறுத்து நிறுத்துப் பக்ஷணத்தைத் துண்டு துண்டாகக் கடித்து பக்ஷிக்க ஆரம்பித்தது. பூனைகள் குரங்கை நோக்கி “ஓ! நியாயாதிபதியே! இனிமேல் நீங்கள் சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டாம். க்ஷேமமாயிருக்கிற பணியாரத்தையாவது எங்களுக்குக் கொடுத்துவிடுங்கள்” என்றன. உடனே குரங்கு “ நான் பட்ட சிரமத்துக்குக் கூலி வேண்டாமா? சம்பளம் இல்லாமல் யாராவது உத்தியோகஞ் செய்வார்களா?” என்று சொல்லி மிச்சப் பணியாரத்தையும் பக்ஷித்துவிட்டது. அந்தக் குரங்கு செய்தது போல் விவாதப்படுகிற சொத்தைத் தாங்கள் அபகரித்துக் கொண்டு வழக்காளிக்கு ஒன்றுங் கொடாமல் துரத்திவிடுகிற நியாயாதிபதிகளும் உலகத்தில் இருக்கிறார்களே!

கல்லுளிச் சித்தன் போனவழி காடுமேடெல்லாம் தவிடு பொடி என்பதுபோல் மாமிச பக்ஷணிகளான சில பெரிய அதிகாரிகள் அவர்களுடைய அதிகார எல்லைக்குள் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குப் போகும்போது அக்கம்பக்கங்களில் உள்ள ஆடு மாடு முதலிய மிருகங்களும், கோழி கொக்கு முதலிய பக்ஷிகளும் அதமாய் விடுகின்றன. நூறு புலிகள் புறப்பட்டாலும் அத்தனை பிராணிகளை அவ்வளவு சீக்கிரத்தில் பக்ஷியா. நவ தானியங்களும் வைக்கோல் புல் விறகு முதலியவைகளும் பல கிராமங்களிலிருந்து சுமை சுமையாக வருகின்றன. அந்தப் பெரிய அதிகாரிகளுக்கு உபயோகமான சாமான்கள் போக, மீந்தவைகளைச் சில்லரை அதிகாரிகளாகிய துர்த்தேவதைகள் பங்கிட்டுக் கொள்ளுகிறார்கள். பின்னும் அவர்களுக்காகப் பந்தல் அலங்கரிக்கவும், தோரணங்கள் கட்டவும், வாழை கமுகு தென்னை முதலிய விருக்ஷங்களெல்லாம் வெட்டப்படுகின்றன. அவர்களுடைய சாமான்களைக் கொண்டு போவதற்காக ஊரில் உள்ள சகல வண்டிகளும் பலவந்தமாய்ப் பிடிக்கப்படுகின்றன. மேற் சொல்லிய தானியம் முதலியவைகளின்